தொகுப்பு: யாசீனிஸ்.காம் (www.yaseenis.com)
பதிவேற்றம்: ஆதம் A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்) Camp Dubai

 இறைவனின் நெருக்கம்

இம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ்ஸல்லம் அவர்களை நேசிக்காமல் இறைவனின் நெருக்கத்தை நம்மால் எந்த வகையிலும் அடைய முடியாது. ஒருவன் அவ்வாறு நினைப்பின் அவன் மதிகெட்ட‌ மூடனாவான்.

தெளஹீதை உடைய பிள்ளைகள் ஒரு போதும் ஹக்கின் கோப சோதனைக்கு ஆளாக மாட்டார்கள்.

தெளஹீதை உடைய பிள்ளைகள் ஒரு போதும் ஹக்கின் கோப சோதனைக்கு ஆளாக மாட்டார்கள்.ஹக்கில் நெருக்கம் உண்டாகும் போது அது தன் திருவிளையாடலை தன் பக்தன் மீது எறிந்து விளையாட்டுப் பார்ப்பதேயாகும். இந்த வேளையிலேய பக்தன் நேராக‌ நிற்க வேண்டும்.

ஸியார‌த்துக்கு தொழிலை விட்டு விடல் சாத்தியமாகாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நீங்கள் ஸியாரத்துக்கு போவதனால் தொழில்கள் செய்வது கடினமாகிற‌து. தொழில் ம‌னித உடலுக்கு மிக அவசியம். உடலிருந்தால்தான் ஆன்மீக வள‌ர்ச்சியுண்டாகும். ஆதலால் ஸியாரத்துக்கு தொழிலை விட்டு விடல் சாத்தியமாகாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ம‌னம் நீ நினைத்த படியெல்லாம் செய்யாதே

ம‌னிதா!

உன் உடலை ஒரு ஓருலகமாக‌ நினைத்துக் கொள். உன் ம‌னம்தான் அர‌சன். நீ நினைத்தபடியெல்லாம் இந்த உலகத்தை ஆட்சி செய்யாதே. அப்படிச் செய்தால் உன் உல‌கமே கெட்டுவிடும்.

சிந்தனை செலுத்து.

ம‌னிதா!

ஒரு செயலைச் செய்யும் முன் நீ மிகவும் அதில் சிந்தனை செலுத்து. பின்னர், அதை உடனே செய்து விடாதே. மெல்ல மெல்ல‌ச் செய். சீக்கிர‌மே செய்ய வேண்டியிருப்பின் நீ அதிற்சிந்தனை செலுத்திய வண்ணமே செய்.

Philosophy

Philosophy என்பதே இல்லை எனக் கூறுகிறார்கள்! இந்த மார்க்கம் மட்டுமில்லை, எல்லா மார்க்கமும் ஆரம்பத்திலேயே 'philosophy' யாக வெளிவந்தைவைகள் தாம்! தத்துவ ஞானத்தையே நாம் philosophy எனக் கூறுகிறோம்.

செலவை முதலில் ஒழுங்குப் பண்ணி நாளாந்தம் இவ்வளவு தான் செலவு என்று ஆக்கிக் கொள்ள வேண்டும்.

செலவை முதலில் ஒழுங்குப் பண்ணி நாளாந்தம் இவ்வளவு தான் செலவு என்று ஆக்கிக் கொள்ள வேண்டும். சற்றுக் கூட்டினால் அள‌வுக்கு அதிகம் போகாது. "பர‌கத் இல்லை" என்றொன்றில்லை. பரகத்தை இல்லாமல் ஆக்கிக் கொள்பவர்கள் நாமே. சிந்தித்து செயலாற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.

பணம் செல‌வழிப்பது

கிடைக்கும் பணத்தை வீணாகச் செல‌வழிக்கக் கூடாது. ஐந்தை சம்பாதித்துப் பத்தைச் செல‌வழிக்கக் கூடாது. ஐந்தைச் சம்பாதிப்பவர் இரண்டைத்தான் செல‌வழிக்க வேண்டும்.

அல்லா(ஹ்)வுக்கு மிகவும் அஞ்சிக்கொள்

அல்லா(ஹ்)வுக்கு மிகவும் அஞ்சிக் நடந்து கொள்ள வேண்டும். அவனுடைய சாபக்கேடு எப்போது இற‌ங்கும் எனக்கூற முடியாது. ர‌ஸூல் நாயகம் அவர்களுக்குத் தேவையற்ற வார்த்தைகளை கூறி உருக்குலைந்து செத்தும‌டிந்த கூட்டங்களின் சரித்திர‌ங்கள் நிறைய உண்டு. ஆதலால் அவர்களின் சாபக்கேட்டைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்.

ஒரே விஷயத்தை நாள் முழுதும் சிந்தித்து உன் மூலையை வீணாக்கி விடாதே

ம‌னிதனே!

ஒரே விஷயத்தை நாள் முழுதும் சிந்தித்து உன் மூலையை வீணாக்கி விடாதே. உன் சிந்தனைக்கும் ஓர் அள‌வுண்டு. சிந்தனை உன்னை மீறி விடக் கூடாது. அப்போது உன் உல‌கம் தடுமாறும். பூகம்பமே ஏற்பட்டு விடும். உனக்கு நர‌ம்பு தளர்ச்சி ஏற்படும். கடைசி வரை உன்னை அது வாட்டும். அச்சம் உண்டாகும். உனக்குப் பித்துப்பிடிக்க ஆரம்பிக்கும். வைத்தியர்களுக்கு பணம் சம்பாதிக்க இது ஒரு சிற‌ந்த வழியாகிவிடும்.

நானே எல்லாம் தெறிந்தவன், எல்லாம் அறிந்தவன் என நிலனத்து பண்ணிவிடாதே நட்டமடைவாய்

ம‌னிதனே!

நானே எல்லாம் தெறிந்தவன், எல்லாம் அறிந்தவன், என் சிந்தனைதான் மேலானது. என்னை விட மேலானவனும் புத்திசாலியும் வேறு எவனும் இல்லை. நானே அனுபவசாலி என நிலனத்து, உனக்கு மூத்தவாா்களை உதாசீனம் பண்ணிவிடாதே. அந்மதா.... நட்டமடைவாய். பயனடையமாட்டாய்.

வணக்கம்

பரிபூர‌ண நிலையில் வணக்கம் வணங்கப்படுப்பொருள், வணங்குபவன் ஆகியன இல்லை. ஆண்டவன், அடிமை, இபாதத்து ஆகிய மூன்றும் இல்லை. நான் என்பது நீங்கிப் போனால்  ம‌ஹ்பூபாகிய ஹக்கு மிக நெருங்கும். விலாயத்தின்படி இதுவே உரூஜ் எனும் படியேற்ற‌ம். இந்த இஸ்தானம் வரைதான் உண்டு. இதற்கு மேல் தானம் இல்லை.

நூல் : பரமார்த்தத் தெளிவு.

அன்பு நாதர் கரந்தனை

அநாதையர் தம் சிரந்தனில்

இன்பமாக வைக்கவே

இவர்ந்துறையும் பரிமளம் (இவர்தல்: உயர்ந்தெழுதல்). (பரிமள‌ம் : நறும‌ணம்).

எவன் அனைத்தையும் விட்டுவிட்டானோ அவனை அனைத்தும் வந்தடையும் ஸூபிக்கு ம‌துஹபு இல்லை.

நூல் : பரமார்த்த தெளிவு.

மன‌சாட்சிக்கு நாம் நல்லவராக நடந்து கொள்ள வேண்டும்.

மற்ற‌வருக்காக, அவர் எம்மை நல்ல‌வர் எனக் கூறுவதற்காக, நாம் நல்லவர்போல் நடித்துக் கொள்ளக் கூடாது. எம் ம‌னசாட்சிக்கு நாம் நல்லவராக நடந்து கொள்ள வேண்டும்.

உனக்கு அனுமதியில்லாத ஒன்றைச் செய்யாதே.

ம‌னிதனே!

உனக்கு அனுமதியில்லாத ஒன்றைச் செய்யாதே. செய்தால் கவலைப்படுவாய்.

நீ விரும்பினாலும் மற்ற‌வன் விரும்பி அனுமதிக்காத ஒன்றை நீ செய்யாதே. அது உனக்கு தொல்லைத் தரும்.

ம‌னிதனே!

நீ விரும்பினாலும் மற்ற‌வன் விரும்பி அஅனுமதிக்காத ஒன்றை நீ செய்யாதே. அது உனக்கு தொல்லைத் தரும்.  பயனற்றதை அல‌சி ஆராயவும். அவற்றிலும் முத்துகள் மறைந்திருக்க‌லாம். அவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள‌வும், அவசியமற்ற‌து என நிச்சயம் கொண்டால் தள்ளிவிடவும்.

கூட்டத்தில் பேசக் கூடியவர் நினைத்துக் கொண்டு பேச வேண்டும்.

எங்கள் வாப்பா நாயகம் குத்புல் அக்தாப் ஸய்யித் யாஸீன் மெளலானா (ர‌ஹ்) அவர்கள் கூறுவார்கள்:

கூட்டத்தில் பேசக் கூடிய ஒருவர் தனக்கு முன்னால் அம‌ர்ந்திருக்கக் கூடிய அனைவரும் ஒன்றும் தெரியாதவர்கள்; என்னிடம் என் பேச்சைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காகவே வந்திருக்கின்றார்கள் என நினைத்துக் கொண்டு பேச வேண்டும்.

இந்த இடத்தில்... தன்னைப் பெரிதாக நினைத்துக் கொள்ளலாம். அது தவறல்ல.

மழைப் பெய்யும்

அனைவரும் "மழை வேண்டும்" என்னும் ஒரே எண்ணத்தில் பிரார்த்தித்தால், அந்த எண்ணத்தில் ஒரு சக்தி இருந்தால்,  மழை பெய்யும்!

மனிதனை ம‌னிதனாக வாழ வைப்பதே அற்புதம்

மனிதனை ம‌னிதனாக வாழ வைப்பதே அற்புதம். அதையே எங்கள் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல‌ம் அவர்கள் செய்தார்கள். அதுதான் ஷரீஅத்தாகும்.

பாபம்

தன்னைத்தான் அறியாமல் இருப்பதே பாபமாகும்.

சோதனை

மனிதனை ஹக்கு (இறை) சோதிக்கிறது என்கிறோம். அது சோதனையல்ல. நோய் தீர்க்கும் ம‌ருந்து.

ம‌னதிடமே வாழ்வின் இலட்சியமாகும்

ம‌னதிடமே வாழ்வின் இலட்சியமாகும்.

இதை மறந்து விட வேண்டாம்.

திடமற்ற‌வன் தடம் புர‌ள்வான்.

ஹக்கே நம‌க்கு போதும்.

நம‌க்கு கவலையும் வேண்டாம். சந்தோஷமும் வேண்டாம். ஹக்கே நமக்குப்போதும்.

தன் வினையே தன்னைச்சுடும்

எவர் மற்றவரைக் கெடுக்க முயல்வாரோ அவர் தன்னிலே கெட்டுபோவார். தன் வினையே தன்னைச்சுடும்.

உள்ளம்

ஹக்கின் இருப்பிடம் அருள் கொண்ட உள்ள‌ம். சாத்தானின் இருப்பிடம் இருள் கொண்ட உள்ள‌ம்.

வியாபார‌த்தின் விரோதிகள்

பொய், கள‌வு, வட்டி, கடன் ஆகியன வியாபார‌த்தின் விரோதிகள்.

உல‌க வாழ்க்கையை தெளஹீதில் சிந்தியுங்கள்

உல‌க வாழ்க்கையை தெள‌ஹீதில் (ஏகத்துவ ஞானத்தில்) சிந்தியுங்கள். அப்போது எல்லாவற்றிலும் மோட்சம் காணலாம்.

வணக்கம்

எந்நேரமும் நாம் செய்வதெல்லாம் வணக்கம் என்பதையே நினைத்து வாருங்கள்.

குறுக்கே பேசக் கூடாது

விள‌க்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது குறுக்கே பேசக் கூடாது. விஷயங்கள் தடைப்பட்டுப் போக வாய்ப்புண்டு!

மர‌ணம்!

பிர‌பஞ்சத்திலிருந்து விடுபடுவது தான் மர‌ணம்!

மிஹ்ராஜின் இர‌கசியம்

  • ஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் 7 படிகளாகும்.

  • மனிதன் தான் "அர்வாஹ்" உடைய ஆல‌த்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் இருந்தான். அப்போது அவன் உயர் அந்தஸ்தில் இருந்தான்.

  • பின்னால், அவன் உல‌கத்தில் பிற‌ந்து சிரிது சிரிதாய் உலகத்தை அறியும்போது அவன் முதலிருந்த நிலையை மற‌ந்து விடுகின்றான்.

  • அப்போது அவன் அப்படியே கீழ்படிக்கு இறங்கிவிடுகின்றான். முதலில் அவன் இருந்தது "உரூஜில்" ஆகும். பின்னர், அவன் "நுஜுலுக்கு" வந்து விட்டான்.

  • அவன் இப்படியே உலக ஆபாசங்களில் கட்டுண்டு அதிலேயே இருந்து விடுகின்றான்.

  • ஹக்கு யாருக்கு நேர்வழி காட்டுகிறதோ அவர் அவனின் அருளைக் கொண்டு படிப்படியாகவும் அமைதியாகவும் பல‌ படிகளை ஒரே நேர‌த்தில் கடந்து விரைவாகவும் "உரூஜ்" சென்று விடுகிறார்கள். இப்படி உயர்ந்த அந்தஸ்தில் உள்ள‌வர்களுக்கு "நுஜுல் ஊரூஜ்" என்னும் வித்தியாசம் அற்றுவிடும்.

  • அவர்களுக்கு நுஜுல் - உரூஜ் என்பது மிகவும் இலகுவாக‌ இருக்கும்.

  • அவர்கள் கீழ்படிக்கு வந்து பார்க்கும்போதும் அவர்கள் உயர்படியில் இருப்பதையே நினைப்பார்கள். உயர் படியை மற‌ந்து விடவும் மாட்டார்கள்.

 

அங்கென்று மிங்கென்று மில்லா - நிலை

எங்கென்றும் பிரிவது மில்லா

பொங்கிடும் பரம‌ திலே - நான்

பொலிவுற்றுப் பூர‌ணங் கண்டேன்."

நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்

ம‌னிதனே!

கூடிப் பழகும்போது எவன் ம‌னிதன் என்பதை உன்னால் அறிந்து கொள்ள முடியுமாயின் நீ பயிற்சியுள்ள‌வன். நீ உன்னைப் பாதுகாக்க முடிந்தவன். இன்றேல் கைசேதமே.

உல‌கம் ஒரு பயிற்சி மேடை

ம‌னிதனே!

உல‌கம் ஒரு பயிற்சி மேடை. உன்னோடு பழகும் ம‌னிதனின் பண்புகளை நீ அறிந்துக் கொள். அதன்படி நடந்துக் கொள்.

மண்

அலையிலிருந்து நுரையும் நுரையிலிருந்து மண்ணுமாகும். அஹ்மதிய்ய மானிட தாற்பரியமாகிய ஆதம் (அலை) மண்ணிலிருந்து வந்தவர்களே.

மிஹ்ராஜ்

ஹக்கின் சம்பூர்ண தரிசனமே மிஹ்ராஜ் ஆகும்.

ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்.

மிஹ்ராஜில் நாம் படிக்கக்கூடிய விசயங்கள் நிறைய உண்டு

மிஹ்ராஜின் போது இறைவனுக்கும் ர‌சூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல‌ம் அவர்களுக்கும் நிகழ்ந்த உரையாடலாகிய அத்தஹிய்யாத்தின் (பொருளை கவனித்தால்) அல்லாஹ் ர‌சூல்

எதிரேயிருந்து பேச்சுக்களைப் பரிமாறிக் கொள்வது இர‌ண்டுமே ஒன்றாயிருப்பது போலத் தெரிகிறது.

மிஹ்ராஜ் என்பது இறைன் அல்லாத‌ மற்ற எல்லாவற்றையும் விட்டு நீங்கியிருப்பது. 

இறைவனிலியே  தனது நாட்டத்தை செலுத்தி அவனல்லாது வேறில்லையென முழுமையாய் நினைத்து நானும் அதுவும் ஒன்றே அதற்கும் எனக்கும் எந்தப் பிரிவுமில்லை நான் பூரணமாய் அதிலானேன் எனக்கருதித் தன்னையும் தன் எண்ணத்தையும் முழுமையாய் அர்ப்பணிப்பதே மிஹ்ராஜ் எனும் உயர்ச்சியாகும்.

இறை என்பது ஒன்று அதுவே பரிபூர‌ணம் எங்குமிருப்பது அந்த ஒன்றே. ஒன்று என்பது ஒருவர் ஒருவராய் இருப்பதில்லை. பரிபூரணமாக இருக்கக் கூடிய ஒன்று.

ஒருவர் மற்றொருவரை விட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவராகவேயிருப்பார்

ஒருவர் மற்றொருவரை விட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவராகவேயிருப்பார்.

அல்லாஹ் தொழச் சொல்லி இருக்கிறான்

அல்லாஹ் தொழச் சொல்லி இருக்கிறான். தொழாமல் இருந்து கொண்டு அல்லாஹ்வே எனக்குத் தா எனக் கேட்டால் அது சரிவருமா? சில‌ர் அப்படிக் கேட்கின்ற‌னர். அவர்களோ தொழுவதில்லை. ஒருவரிடம், நீங்கள் தொழுகின்றீர்களா? என்றேன். அவர் இல்லையென்றார். அப்படியானால் நீங்கள் துஆ கேட்கவே முடியாது என்றேன். தொழாதவர்கள் கேட்பதில் எந்தப் புண்ணியமுமில்லை, அல்லாஹ் தொழச் சொன்னதையே கேட்காதவர்கள் நாங்கள் சொன்னதையா கேட்கப் போகின்ற‌னர்.

எல்லாமே ஹக்குடைய நாட்டமாக எங்களில் பதிய வேண்டும்

அல்லாஹூ தஆலா எங்களுக்கு இந்த உலகத்திலே வாழும்பொழுது பரிபூரணமான‌ ஞான விளக்கதைத் தந்து எங்களைச் சிற‌ப்பித்து வைக்க வேண்டும். அதைபோல் எங்களுக்கு அல்லாஹூ தஆலாவுடைய ஜோதியான நூரை எங்களுடைய முழு உடலிலும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். எங்களுடைய மூச்சு, எங்களுடைய கேள்வி, நாங்கள் உண்பது, நடப்பது, கேட்பது, எல்லாமே ஹக்குடைய நாட்டமாக எங்களில் பதிய வேண்டும்.

 புகைப்பதை நிறுத்திவிடுங்கள்

நீங்கள் நோன்பு பிடிக்குபோது உங்களுக்கு எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டுமோ அவ்வள‌வு வைராக்கியத்லத மனதில் வைத்து புகைப்பதை நிறுத்திவிடுங்கள்.

வஹ்ததுல் வுஜுத் என்றால் என்ன?

வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று என்று பொருள் கொள்ள‌லாம். ஆயினும் மெய்ஞ்ஞானிகள் என்ற‌ ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத்“ என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள்.

“வஹ்தத்” என்றால் ஒன்று என்றும், வுஜூத் என்றால் உள்ளமை அல்ல‌து மெய்பொருள் என்றும் பொருள் வரும்.

ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்ற‌ இந்த ஞானத்தை போதிக்கவே இஸ்லாமிய ஆன்மீக  கல்லூரிகளான தரீக்காக்கள் உருவாகின.

இஸ்லாம் (ஷரீஅத்), ஈமான் (அகீதா), இஹ்ஸான் (தரீக்கத்) இவை மூன்றும் சேர்ந்ததுதான் மார்க்கம். இதுதான் தீன்.

இஹ்ஸான் என்று சொல்ல‌க்ககூடிய தரீக்கத்தை இறைவன் நம‌க்கு வழங்கிய கார‌ணம் தன்னை அறிந்து தன் ரப்பை (இறைவனை) அறிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான்.

தரீக்கத்துடைய ஞானவான்களான ஸுபியாக்கள் இந்த தரீக்காக்களின் (ஆன்மீக‌ கல்லூரிகள்) மூல‌ம் ஒவ்வொரு முஸ்லீம்களுடைய உள்ளங்களை திக்ர் பயிற்சியின் மூல‌ம் தூய்மைப்படுத்தி ம‌னிதன் தன்னை அறிந்து தன் ரப்பை அறிந்து, இறைவன் ஒருவன் என்ற தெளஹீதை உள்ள‌த்தின் மூல‌ம் உணர வைப்பதற்காகவே தரீக்காக்களை (ஆன்மீக கல்லூரிகளை) உருவாக்கினார்கள்.

ஏனெனில் இஹ்ஸான் என்பது கற்கும் அறிவல்ல. உணரும் அறிவு. இதனால்தான் ஜிப்ரீல் அலைஹிவஸல்ல‌ம் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல‌ம் அன்னவர்களிடம் இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்ட போது, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல‌ம் அன்னவர்கள் கூறினார்கள், தான் இறைவனை பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற உணர்வில் வணங்குவது அல்ல‌து இறைவன் தன்னை பார்த்துகொண்டு இருக்கிறான் என்ற‌ உணர்வில் வணங்குவது. (ஸஹிஹுல் புகாரி)

இதன் மூல‌ம் நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம் இஹ்ஸான் என்பது உணரும் அறிவு என்று.

இப்போது விடயத்திற்கு வருவோம், வஹ்ததுல் வுஜுத் என்றால் உள்ளமை ஒன்று அதாவது இறைவன் ஒருவன் என்பதை அறிந்து உணரும் கல்விக்கே வஹ்ததுல் வுஜுத் என்று கூற‌ப்படும்.

வஹ்ததுல் வுஜுத் பற்றி அல் குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏரளமாக இருக்கிற‌து. அதன் விளக்கங்களை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள‌ முடியாது. அவைகளை ஆன்மீக ஆசிரியர் ஒருவர் மூலமாகவே அறிந்துக்கொள்ளலாம்.

அதாவது (Heart to Heart) உள்ள‌த்தில் இருந்து உள்ள‌த்திற்கு என்ற‌ முறையில் பெற்று உணரும் அறிவாகும் (கல்வியாகும்)

இன்று இதை அறியாத சில அறிவிலிகள் வஹ்ததுல் வுஜுத் வழிகேடு, ஷிர்க் என்று கூறியும் அந்த கல்வியை போதித்த, போதிக்கின்ற‌ ஞானவான்களை காபிர், முர்த்தத் என்று பத்வா கொடுத்து கடைசியில் இவர்களே காபிர்களாக மாறுகிறார்கள்.

இந்த கல்வியை இவர்கள் எதிர்ப்பதற்கு கார‌ணம் என்னவென்றால் ஆன்மீக அறிவு சமுதாயத்தில் இருந்து தூரமாகி வருகிற‌து.

இஸ்லாத்தை அழிக்க வந்த லியோனிச கூலிப்படைகளின் நேக்கமே இஸ்லாத்தில் இருந்து ஆன்மீகத்தை துடைத்தெறிய வேண்டும். அவர்களுக்கு தெரியும் ஆன்மீகம் இல்லாத சமுதாயத்திற்கு வெற்றிக் கிடைக்காது என்று.

ஷிர்க்கில் வாழும் வஹாபிகள் வஹ்தத்துல் வுஜூதை எதிர்ப்பது ஆச்சரிமான விஷயம் அல்ல‌. ஆனால் சில‌ முஸ்லீம்கள் குறிப்பாக தரீக்காவை சேர்ந்த ஒரு சில‌ரும் அதை எதிர்க்கிறார்களே ஏன்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு கார‌ணம் நாம் மேலே கூறியதுதான். அதாவது ஆன்மீக அறிவு சமுதாயத்தில் இருந்து தூரமாகி வருகிற‌து.

இன்று சில‌ர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) உருவாக்கப்பட்டதற்கு கார‌ணம் வருடம் ஒரு முறை கந்தூரி கொடுக்கவும், மெளலித் ஓதவும், கொடி ஏற்ற‌வும், உரூஸ் கொண்டாடவும் இதற்காக தான் தரீக்காக்கள் இருக்கிற‌து என்று நினைத்து அறியாமையில் வாழ்கிறார்கள்.

தரீக்காக்கள் (ஆன்மீக கல்லூரிகள்) உருவாக்கப்பட்ட நோக்கமே உள்ளமை ஒன்று மற்றவையன்று என்று உணரவே.

“உன்னை எல்லாவற்றிலும் காண். எல்லாவற்றையும் உன்னில் காண். அப்போது அனைத்தும் நீயாகி விடுவாய்.” (நூல் : ராத்திப்பதுல் ஹக்கிய்யத்தில் காதிரிய்யா)

நன்கு தெரிந்த தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டும்

நன்கு தெரிந்த தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டும். அல்ல‌து தெரியாத தொழிலில் பிறர்மூல‌ம் முதலீடு செய்வதாலும் அந்தத் தொழிலினை சிறுகச்சிறுகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலாளிகள்

முதலாளிகள் தம்மிடத்துத் தொழில்புரியும் தொழிலாளிகளை அடிமைகள் எனக் கருதல் கூடாது.

அவர்களுக்குரிய வேலைகளையே கொடுத்தல் வேண்டும். அவர்களுடன் அன்புடனும் பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

வியாபார‌த்தின் விரோதிகள்

பொய், கள‌வு, வட்டி, கடன் ஆகியன வியாபார‌த்தின் விரோதிகள்.

நம் சபை நல்ல‌ முறையில் நடக்க வேண்டும்

நம் சபை நல்ல‌ முறையில் நடக்க வேண்டும். நல்ல‌ முறையில் செயல்பட்டு வாருங்கள். அதனால் ம‌க்கள் பூர‌ண நன்மையடைய வேண்டும் என்பதே எம‌து அவா. நாம் இல்லாத கால‌த்திலும் தெளஹீது சிற‌ப்புடன் மிளிர வேண்டும் என்பதே எம் உயர்ந்த நோக்காகும். ஹக்கு அதனைப் பூர்த்தி செய்தருமாக.

சபையின் புனிதம் காப்போம்

சபைகளில் சிற‌ந்த சபை, உயர்ந்த சபை, புனித சபை, நன்மை தரும் சபை, அமைதி சபை, ஆன்மீக சபை, அருட்சபை, திருச்சபை, சுவனசபை எது?

எந்த சபையில் இறைவனைப் பற்றி நினைவு கூறப்படுகிறதோ அந்த சபை சிற‌ந்த சபை, அதுமட்டுமில்ல... அது சுவன பூஞ்சோலையாகவும் மாறிவிடுகிறது.

இதுதொடர்பான நபி மொழி குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:

“நீங்கள் சுவன பூஞ்சோலைகளை கடந்து சென்றால், நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள்.‘இறைத்தூதரே, சுவன பூஞ்சோலை என்றால் என்ன?’ என நபி தோழர்கள் கேட்டனர். ‘அது இறைவனை நினைவு கூற‌ப்படும் சபை’என நபி (ஸல்) பதில் அளித்தார்கள். நன்மையும், இறையருளும், ம‌ன அமைதியும் கிடைக்கும் இறைநினைவு திருச்சபையில் நாம் கல‌ந்து கொள்ளும் போது அங்கே கிடைக்கும் இடத்தை பாக்கியமாக கருதி, அந்த இடத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். இது போன்ற சபையில் நாம் வெட்கப்பட்டு ஒதுங்கினாலோ, புற‌க்கணித்தாலோ, இறைவனும், இறையருளும் நம்மை விட்டும் புற‌க்கணிக்கப்படும். இறை நினைவுச் சபையில் நாம் ஒதுங்குவதும், அந்த இடத்தை பூர்த்தி செய்வதும் இறைவனை அடைவதும், சொர்க்கத்தில் இடத்தை முன்பதிவு செய்வதும் ஆகும் என்பது நபி மொழி கூறும் உண்மை சான்றாகும்.

 ‘ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ம‌க்களுடன் இறையில்ல‌த்தில் அம‌ர்ந்திருக்கும் பொழுது மூன்று நபர்கள் முன்னோக்கி வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்)அவர்களை நோக்கினர்; மூன்றாம் நபர் பின்னோக்கிச் சென்றுவிட்டார். முன்னோக்கிய இருவரில் ஒருவர் சபையில் இடைவெளியை கண்டுக்கொண்டு அங்கே அம‌ர்ந்து கொண்டார். மற்றொருவர் சபையினருக்கு பின்னால் அம‌ர்ந்து கொண்டார். மூன்றாம‌வர் சபையை புற‌க்கணித்து விட்டார். சபை முடிந்த பிற‌கு ‘இம்மூவரைப் பற்றி நான் உங்களுக்கு சில‌ தகவலை அறிவிக்கட்டுமா?’ என நபி (ஸல்) கேட்டார்கள். முதலாம் நபர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கிக்கொண்டார்; அல்லாஹ்வும் அவரை தன் அருளின் பக்கம் இழுத்துக் கொண்டான். இரண்டாமவ‌ர் கூட்ட நெரிசலைக் கண்டு வெட்கப்பட்டு பின்னால் அம‌ர்ந்துக்கொண்டார். அல்லாஹ்வும் அவரைக் கண்டு வெட்கப்பட்டு வில‌கிக் கொண்டான். மூன்றாம் நபர் சபையை புற‌க்கணித்தார்; அல்லாஹ்வும் தனது அருளை விட்டும் அவரை புற‌க்கணித்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(நூல்: புகாரி, முஸ்லீம்: அறிவிப்பாளர் அபூவாகித் (ரலி) அவர்கள்.

உதவி செய்பவர்களாக இருங்கள்

ஒருவருக்கொருவர் உதவி செய்பவர்களாக இருங்கள். நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் ஏதாவதொரு விதத்தில் அதன் பலனை அடைவீர்கள்!

ஒருவருக்கு நீங்கள் உதவும் போது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல‌ம் அவர்கள் மிகவும் சந்தோஷமடைகிறார்க‌ள். கஷ்டத்தில் வாடும் மனிதனைப் பார்த்து எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல‌ம் அவர்கள் வேதனைப்படுகிறார்கள். அம்ம‌னிதர் இன்னொருவரால் உதவி செய்யப்படுவதைய‌றிந்து எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல‌ம் அவர்கள் மிகவும் ஆனந்தங் கொள்கிறார்கள். அவர்கள் உயிரோடு தானே இருக்கிறார்கள்!

எனவே, உங்களால் முடிந்த அள‌வு பிறர்க்கு உதவுங்கள். அதனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நஷ்டமும் ஏற்படப் போவதில்லை!

ஷரீஅத்துடைய விஷயங்களையும் அறிந்து அவ்வாறு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தவ்ஹீதுடைய இல்மை (ஞான அறிவை) கற்றுக் கொள்வது போல் ஷரீஅத்துடைய விஷயங்களையும் அறிந்து அவ்வாறு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தியாகம்

அனைவரும் தியாக மன‌ப்பான்மையோடு நடந்து கொள்ள வேண்டும். நிறைய பணத்தை வந்து கொட்டுவது தான் தியாகம் என நிலனத்துக் கொள்ளாதீர்கள். தியாகம் என்பது (முரீத்களைப் பொருத்த வரை) உயிரையும் ஷெய்கிற்காகத் தருவேன் எனும் நிலைக்கு வருவது தான் தியாகம்.

ர‌சூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்ல‌ம் அவர்களுக்காக தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணிக்கும் நிலையில் வாழ்ந்த அருமைமிக்க‌ கலீபாக்கள் ஹள்ர‌த் அபூபக்கர் ஸித்தீக் (ரலி), ஹள்ரத் உமர் (ரலி), ஹள்ரத் உதுமான் (ரலி) ஹள்ரத் அலி (ரலி) ம‌ற்றும் ஏனைய பெருமைமிக்க ஸஹாபாக்கள் போன்று உங்கள் நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ம‌னிதன் நேர்மையுள்ள‌வனாக இருக்க வேண்டும்.

நேர்மை, நீதம் ம‌னிதர்களுக்கு மிக முக்கியம். மிகமிக முக்கியமாக நமது முரீத்களிடம் நேர்மையும் மற்ற மற்ற நல்ல‌ குணங்களும் இருக்க வேண்டும்.

முதலாவதாக மனிதன் நேர்மையுள்ள‌வனாக இருக்க வேண்டும். கோபமுள்ள‌வனாக இருக்க கூடாது. ஒருவருக்குப் பொருத்தமில்லா கொடிய செயலைச் செய்ய ஆர‌ம்பிக்கக் கூடாது. பொருத்தமில்லாததை விட்டு விட வேண்டும்.

வணக்கமின்றேல் வளர்ச்சியும் இராது.

அனைத்தினது வள‌ர்ச்சிக்கும் முழுக்காரணாமாய் அமைந்துள்ளது வணக்கமே. வணக்கமின்றேல்  வள‌ர்ச்சியும் இராது; வாழ்வும் இராது; உல‌கமும் இராது; அனைத்தும், வணங்கும் பொருளாயும் வணக்கமாயும் வணங்கப்படு பொருளாயும் இயற்க்கைப்படியே அமைந்துள்ள‌ன. வணங்காம‌ல் ஓய்ந்து நிற்கும் வாய்ப்போ ஒரு கணமும் அவற்றிற்கில்லை. எல்லாவற்றின் வணக்கங்களின‌தும் தாற்பரியமும் ஒன்றேயாம்.

குரு சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்வது தான் முக்கியம்

குரு சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்வது தான் முக்கியம்.  அதனை விடுத்து, குருவின் கூற்றை ஒப்புக் கொள்ளாம‌ல் ஒருவர் வாதம் செய்ய முற்படுபவரானால் அவர் இந்த பைஅத்தை விட்டு வில‌கிக் கொள்வது தான் அவசியம் இந்த நிலை சில‌ருக்குத் தெரிவதில்லை.

அல்லாஹ்வுக்கு உதவுதல் என்பது ஏழைகளுக்கு உதவுவது

“நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான்” என்ற இறைமறை வசனத்தின் கருத்து. அல்லாஹ்வுக்கு உதவுதல் என்பது ஏழைகளுக்கு உதவுவது. அவ்விதம் உதவுவோருக்கு அல்லாஹ் உதவி செய்கின்றான்.

ஞான அறிவு

ஞான அறிவைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் எவருக்கு ஏற்பட வில்லையோ அவரின் முடிவு கேடானதாக இருக்கும். (நூல்: ஹகாஇகுஸ் ஸஃபா)

இல்மு

தவ்ஹீதுடைய இல்மு எங்களுக்கு இருந்தால் இப்படியான சில நல்ல‌ கருத்துகளைப் பெற்றுக் கொள்ள‌லாம். மற்ற எல்லா அறிவுகளையும் விட மிகச் சிற‌ப்பான அறிவு தவ்ஹீதுடைய இல்முதான்.

பரமார்த்தத் தெளிவு

ஞான முதிர்ச்சி

நம்மில் அசையாத அன்பும் நம‌க்காகத் தியாகமும் நம்மில் உங்களை அழித்தலுமே ஞான முதிர்ச்சியுமாகும்.

தவ்ஹீதுடைய இல்மு ஒருவரிடமிருந்து, அவர் ஒன்றுமே படிக்காம‌ல் ஜீரோவாக இருந்தாலும்கூட அவர்தான் சிற‌ந்தவர்.

தவ்ஹீதுடைய இல்மு ஒருவரிடமிருந்து, அவர் ஒன்றுமே படிக்காம‌ல் ஜீரோவாக இருந்தாலும்கூட அவர்தான் சிற‌ந்தவர்.

எம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை நேசிக்காம‌ல் இறைவனுடைய நெருக்கத்தையோ,அன்பையோ, நம்மால் எந்த வகையிலும் அடைய முடியாது

எம் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை நேசிக்காம‌ல் இறைவனுடைய நெருக்கத்தையோ, அன்பையோ, நம்மால் எந்த வகையிலும் அடைய முடியாது. ஒருவன் அவ்வாறு நினைப்பின் அவன் மதிகெட்ட மூடனாவான்.

இரண்டறக் கலத்தல்

இரண்டறக் கலத்தல் என்பது பரிபூர‌ண எண்ணத்தால், நினைவால், அறிவாற்ற‌லால் உண்டாவது. உடல் மறைவது மட்டுமில்ல‌. உடலை அழித்துக் கொள்வது மட்டுமில்ல‌.

பனா

உடலும் உயிரும் எப்படிக் கலந்திருக்கிறதோ பனிக்கட்டியும் நீரும் எப்படிக் கலக்கிறதோ அப்படிக் கலப்பது "பனாவும்" இரண்டற கலத்தலுமாகும். "மூதூ கப்லல் ம‌வ்த்" எனும் எம‌து ஆருயிர் பெருமானார் வாக்குத்தான் இது.

ஈமானைப் பல‌ப்படுத்துங்கள்

அனைத்துமாய்யாங்குமாய் தினைத்துணைத்தானும் அதுவாய் அதுவிதுவின்றி ஒன்றாய் நிற்ற‌ல் பர‌மே என என்றும் ம‌னதிருத்தி ஈமானைப் பல‌ப்படுத்துங்கள்.

சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள், வலிய்யுல் கறீம் அவர்களுக்கு அருளிய பட்டோலை ஒன்றே பட்டொளி வீசி நம் உயரிய சிந்தனைக்கு விருந்தாக அமைகின்ற‌து!

ஹக்கின் பாத்தினியத்தை அறிந்தவர்களை அப்படியே அறியும் அறிவனைத்தும் பொதிந்த வாப்பா நாயகத்தையே கதியாய்க் கொண்ட வாப்பா நாயகத்தின் உயிருக்குயிரான காதிமுல் வலிய்யுல் கறீமே!

கடிதம் கண்டோம்; பரவசமானோம்! எனது 40ம் வயதில் திரும்ப வாப்பா நாயகத்தை என்னில் காண விரும்புகிறீர்கள். இவ்வார்த்தை மிக உண்மையானதே. எனது கியால் என்னும் உல‌கம் சில மாதங்களுக்கு முன் செய்த சஞ்சார‌த்தின் பல‌ன் உங்கள் கல‌த்தில் (எழுத்தில்) வந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)

உங்கள‌து இக்கடிதம் வந்த அன்று  வேறோரு விடய‌மாயும் அன்றைய தினத்திலே என் கல்பாகிய அர்ஷில்லாஹ்வில் பெரும் புயல் அடித்தது. அப்போது இர‌வு உற‌க்கம் கொண்டேன். என் உயிரும் என் கண்மணியுமான‌ என் அருமை வாப்பா நாயகத்தை கனவிற் கண்டேன். என்றும் போல் என் கனவில் என் வாப்பா நாயகம் அவர்களுக்கு காதிமாய்க் காட்சியளித்தேன். அப்போது என் வாப்பா நாயகம் என்னோடு உடலோடு இருக்கும் போது உரையாடுவது போல் வாப்பா நான் தான் நீ என்றார்கள். அல்ஹம்துலில்லாஹி அலாகுல்லி ஹால். ம‌கிழ்ச்சி கொண்டேன்.

எனவே என் நாவில் கீழ்க்கண்ட அபூர்வமான பைத்து நடந்தது. இதையும் வாரிதாதுல் இலாஹிய்யாவிற் சேர்த்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.

- ஒன்றுபட்ட நிலையிலே நிச்சயமாக நானே தான் நீங்கள் -

ஒவ்வொரு நாளும் எனது தந்தை நாயகம‌வர்கள் ஆன்மாவைத் தரிசிக்கிறேன். சாஷ்டாங்கத்திற்குரிய எனது உடலும் எனது ரூஹும் அதனால் சுகம் பெறுகிற‌து. ஒருநாள் இர‌வு கனவிலே சங்கைக்குரிய என் தலைவராகிய எனது தந்தை நாயகம‌வர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் சொன்னார்கள். நிச்சயமாக நானேதான் நீங்கள் என்பதாக, நிச்சயமான அவர்களின் சொல்லிலே எதார்த்தத்தை உணர்ந்தேன். இறைவனிடத்தில் எங்களுக்கிடையில் சுட்டுப் பொருள் (ளமீறுகள்) இல்லை. ஒன்றிப்பின் கருத்துகள் அதில் பிரகாசிக்கிறது.

ஒன்றித்தலின் எதார்த்தத்தை அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டார்கள். சங்கைக்குரிய அவர்களின் திருவாக்கு எப்போதும் உண்மையானதாகும்.

சகோதரனே! இந்த கருத்திலே எவ்வித மாற்ற‌மும் கிடையாது. எனது அம்சத்தைக் கவனிப்பீர்களாக. அதுவே எனது காட்சியாகும்.

வாப்பா நாயகத்தின் ஜியார‌த்திற்குப் போனால் அங்கு என் பெயர் சொல்ல மற‌க்காதீர்கள். நானும் அங்கே தான் இருக்கிறேன். ஒரே உடலும் ஒரே உயிரும் வேறு எங்க‌ இருக்கும். ஏராளமான‌ நாஸூத்தின் உலகத்திலே இன்ஸான் எனும் உடலைக் கொண்டு அதற்கொரு பெயரையும் வைத்து ஒருவகை ஏமாற்றமான‌ வித்தை காட்டுகிறேன். உல‌க வாழ்க்கை கனவேயன்றி வேறன்று. உல‌கமே உல‌கமே வாழ்க்கையே என்று அநேகர் ம‌யங்கி ஹக்கை மற‌ந்து விட்டனர். ஆனால் உண்மையான ம‌கான்கள் உல‌க வாழ்க்கையை ம‌வுத்தாகவே கருதினார்கள். தாங்கள் மெய் மற‌ந்தார்கள். (மெய் என்பது உடலை) இதனாலேயே எனது வாப்பா நாயகம‌வர்கள் கீழ்க்கண்டவாறு யவானியில் கூறுகிறார்கள்:

 

ஃபீ வஜ்ஹி பாதிலிஹா அஃப்நவ் நுஃபூஸஹுமு மின்ஹும் கதீருன் பிலா ர‌வ்ஹின் வரைஹானி -

ஃபீ வஜ்ஹி ஹக்கின் ல‌ஹா அஃப்நவ் வுஜூதஹுமு கலீலுஹும் சாததுன் ஃபீ நூரி ல‌ம்ஆனி.

 

அவளின் அசத்தியம் என்ற‌ முகத்தில் அந்த ம‌னு ஜின்களில் அநேகர் சந்தோஷமின்றியும் கருனைமின்றியும் தங்களை அழித்துப் பாழ்படுத்தி விட்டனர்.

அந்த சுந்தரியின் எதார்த்த சத்திய முகத்திலே ஜொலிக்கும் பிரகாசத்திலே அந்த மனுஜின்களிலிருந்து கொஞ்சப் பேர்களான நாயகர்கள் தங்கள் உள்ளமையை அழித்து அவளின் ஜீவன் பெற்றார்கள். அர்வாஹுடைய ஆல‌த்தில் நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறேன். அப்படி இருப்பதனால்தான் இங்கே நான் இற‌ந்தவன் போலானேன்.

ஆனால் இதுவே ஹக்கான சீவியமாகும். (அல்ஹம்துலில்லாஹ்) ஹக்கின் ஹக்கியத்தை அறிபவர்கள் மிகக் குறைவு, அறிந்தவர்களே இன்ஸானுல் காமில் என்னும் பூரண ம‌னிதர்கள்.

ர‌சூல் ஸல்ல‌ல்லாஹூ அலைஹி வஸல்ல‌ம் நபி எனச் சொல்லி அவர்கள் அப்படியே இருந்து விடவில்லை.

ம‌னிதன் ஒருவனுக்கு வாழக்கூடிய எல்லா அம்சங்களும் ர‌சூல் ஸல்ல‌ல்லாஹூ அலைஹி வஸல்லம்  அவர்களிடம் இருந்தது. நபி எனச் சொல்லி அவர்கள் அப்படியே இருந்துவிடவில்லை.

நம்மால் அதிக நட்புக் கொண்டுள்ள‌ பிள்ளைகளை நாம் ஆட் கொண்டுள்ளோம்.

நம் பிள்ளைகளின் கடமைகளை நிறைவேற்றுவது நம‌க்குக் கடமையாக உள்ள‌தால் துன்பம் கஷ்டங்கள் நம‌க்கு எள்ளளவுமில்லை. நம்மால் அதிக நட்புக் கொண்டுள்ள‌ பிள்ளைகளை நாம் ஆட் கொண்டுள்ளோம்.

தவ்ஹீது முக்கியம்

தவ்ஹீத் ம‌னிதனுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் தவ்ஹீதுதான் மனிதனை ம‌னிதனாக்குவது!

ம‌னிதன் ம‌னிதனாக வாழ வேண்டுமானால் அவனுக்கு தவ்ஹீது முக்கியம் இருக்க வேண்டும்.

ம‌னதில் பக்தி இருக்க வேண்டுமானால் தவ்ஹீது இருக்க வேண்டும். பயம் இருக்க வேண்டுமானால் தவ்ஹீது அவசியம்!

எனவே, தவ்ஹீதை நாம் அறிந்துவிட்டு "எல்லாமே அதுதானே" என பயம‌ற்றுப் போவது பெரிய முட்டாள்தனம்!

ஹக்கை தரிசிப்பதே நம்மை தரிசிப்பதாகும்.

ஹக்கை தரிசிப்பதே நம்மை தரிசிப்பதாகும். அதுவே சாந்தியாகும். நாமல்லாத வேறோன்றுமில்லையே என்ற மூலமந்திர‌ம் உங்கள் ம‌னதிலும் மூச்சிலும் ஊறிப்போக வேண்டும்.

எல்லாம் அதுதான் என்று கொண்டால் எதிலும் பிழை வர போவதில்லை.

நினைப்பதும் நினைப்பும், பார்ப்பதும் பார்வையும், கேட்பதும், கேள்வியும் ருசிப்பதும் ருசியும் உணர்வதும் உணர்ச்சியும் எல்லாம் அதுவேயாதலால் அதுதான் யாவும் என்று கொண்டால் எதிலும் பிழை வர போவதில்லை.

பொறாமை

பொறாமை போன்ற கொடிய பாபங்களிருந்தும் தவிர்த்து கொள்ளுங்கள். பாபங்களில் மிகக் கடுமையானது பொறாமை.

ம‌ஹான்கள்

நம‌து கூற்றுக்களின்படி நடப்பின் அனைவரும் இன்புறுவர். அவ்வாறு நடந்ததாலே சிலர் மஹான்களாயினர்.

பர்லான‌ கடமைகளைக் கண்டிப்பாக செய்து வாருங்கள்.

பர்லான‌ கடமைகளைக் கண்டிப்பாக செய்து வாருங்கள். தொழுங்கள், நோன்பு வையுங்கள், ஜகாத் கொடுங்கள். வசதி பலடத்தவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லுங்கள்.

ர‌சூல் நாயகம் அவர்களைத் தரிசித்து, "யா ரசூலுல்லாஹ்! எங்களை ம‌னிதனாக வாழ வைத்தீர்களே- நாங்கள் உங்கள் அடிமைகள்" எனப் போற்றிப் புகழுங்கள்.

ஆத்மீகத்தில் இச்சை

ஆத்மீகத்தில் நீங்கள் அதிக இச்சை கொள்வீர்களாயின் அதுவே உங்களை ஆத்மீகத்தில் இழுத்துவிடும்.

பொறுதியுடன் இருங்கள்.

எவர் உங்களுக்கு எதைப் பேசினாலும் பொறுதியுடன் இருங்கள். எதிர்ப்புக் காட்ட வேண்டாம். உங்களை எதிர்ப்பவர்கள் கஷ்டமும் நஷ்டமும் அடைவர்.

பரிபூரண ம‌னிதர்

பரிபூரண ம‌னிதர் எவ்வாறு இருக்க (முடியும்) இருக்க வேண்டும். என்பதனைக் காட்டுவதற்காகவே ர‌சூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்ல‌ம் அவர்கள் (ஹக்கிலிருந்து) உதயமானார்கள்.

இறைத்தூதரே இலராயின், (அவர்களின் தாற்பரியமே இல்லையாயின்) இவ்வுல‌கமும் அவ்வுல‌கமும் தோன்றியிருக்கா. இம்மறை தானும் வந்திருக்காது. இத்தத்துவார்த் உண்மையை ஒழுங்கற்ற‌ மூடர்கள் அறிவரோ? அறியார்.

நான் எனும் அகந்தை

தான் எனும் அகந்தையத் தவிர மற்ற எதையும் இல்லாக்கிவிடாதே. (அதாவது, உன்னிடத்தில் அகந்தையே இருக்கக்கூடாது. அஃதொன்றைத்தவிர‌ ஹக்கின் நாட்டமே உன்னிடத்திருக்க வேண்டும்) நூல்: துஹ்பதுல் முர்ஸலா.

ம‌னசாட்சிக்கு நாம் நல்லவராக நடந்து கொள்ள வேண்டும்.

மற்ற‌வருக்காக, அவர் எம்மை நல்ல‌வர் எனக் கூறுவதற்காக, நாம் நல்லவர்போல் நடித்துக் கொள்ள‌க் கூடாது. எம் ம‌னசாட்சிக்கு நாம் நல்லவராக நடந்து கொள்ள வேண்டும்.

குத்பு நாயகம் முஹிய்யுத்தீன் ஆண்டகை(ரலி) போன்ற மகான்களால்தான் மக்களின் வாழ்க்கை முறை திருத்தி இருக்கிற‌து. அவர்கள் ஷரீஅத்தையும் ஹகீகத்தையும் தெளிவுப்படுத்தியிருகிறார்கள்.

குத்பு நாயகம் முஹிய்யுத்தீன் ஆண்டகை(ரலி) போன்ற மகான்களால்தான் மக்களின் வாழ்க்கை முறை திருத்தி இருக்கிற‌து. அவர்கள் ஷரீஅத்தையும் ஹகீகத்தையும் தெளிவுப்படுத்தியிருகிறார்கள். அவர்களுக்கு நாம் நன்றி பாராட்டத்தான் வேண்டும்.

ஈமான்

தெள்ஹீதே ஈமானாகும். அல்லாஹ் ஒருவன் என நம்புவதே ஈமானின் முதன்மையானது. அதற்குப் பிற‌கு வந்தவைகளே ஏனைய நான்கும். ஆகவே யாரிடத்தில் எல்லாவறிற்கும் முதன்மையான தெளஹீதில்லையோ அவரிடத்தே ஈமானில்லை என்பதாகும். அனைத்தும் ஹக்கேயென்ற உண்மைத் தத்துவம் உங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

வாழ்வின் இலட்சியமாகும்

ம‌னதிடமே வாழ்வின் இலட்சியமாகும். இதை மற‌ந்து விட வேண்டாம். திடமற்ற‌வன் தடம் புர‌ள்வான்.

சாதி

நாம் அனைவரும் ஒரே சகோதர‌ர்கள். "சாதி இரண்டொழிய வேறில்லை" எனச் சொல்லியது போல‌ -சாதி இரண்டே சாதி தான்-ஒன்று ஆண் சாதி, மற்றொன்று பெண் சாதி. ஆக, சாதி இவ்விரு சாதிகளின்றி வேறியில்லை! ஆண்பால் பெண்பால் என்னும் இர‌ண்டு சாதிகள்தான் உல‌கில் உள்ள‌ன.

எல்லா வலிமார்களுக்கும் நாமே தலைவராய் இருக்கிறோம்.

எல்லா ஞானிகளுக்கும் எல்லா வலிமார்களுக்கும் நாமே தலைவராய் இருக்கிறோம். அவர்கள் (ஞானிகள்) தம்மை அறியாத வகையில் எம்மாலே இயக்கப்படுகிறார்கள்.

அவர்கள் இதை அறிய முடியாது. காரணம் அவர்களுக்கும் எம‌க்கும் இடையில் பல‌ திரைகள் உள்ள‌ன. நாமே எங்கும் சர்வமாய் ஏகமாய் சத்தியமாய் உள்ளோம்.

பனாபிஷ் ஷைக்

ஷைகிடம் அதிகமான அன்பு கொள்ள வேண்டும் (பனாபிஷ் ஷைக்) ஷைகிடம் இரண்டற கல‌த்தல் தான் தவ்ஹீதின் முதலாவது படியாகும். அதற்குப் பிறகு தான் ஹக்கில் இரண்டற கலப்ப‌து.

ஹக்கில் ஹக்காய் தோன்றுகிறார்கள்.

நபிமார்களும், ரசூல்மார்களும் ஹக்கில் ஹக்காய் எப்படி அவனது இல்மிலிருந்து (அறிவிலிருந்து) தோன்றினார்களோ அவ்வண்ணமே குத்புமார்களும் வலிமார்களும் தோன்றுகிறார்கள்.

விண்ணில் ம‌ண்ணில் நீரினில் நம‌க்குண்டு வீர‌ர்

எண்ணில் வலியார் நம்படையில் வீரர்களாமே

நூல்: கஸீதத்துல் அஹ்ம‌திய்யா (ம‌ற்றும்) கஸீதத்துல் அவ்னிய்யா

இறைவன்

இறைவன் எங்கும் பரிபூரணமாய் இருக்கிறான். எல்லாப் பொருட்களும் ஆதி முதல் அந்தம் வரை உள்ள எல்லாம் இறைவனாகவே இருக்கின்றான் ஆதலால் ம‌னிதனும் அவ்வாறே இருப்பதோடு அனைத்திலும் சேர்ந்து இயற்கையிலேயே அசைந்து ஆடி வருகிறான் என்பது உண்மையிலும் உண்மையே.

தெளஹீதை உடைய பிள்ளைகள் ஒரு போதும் ஹக்கின் கோப சோதனைக்கு ஆளாக மாட்டார்கள்.

தெளஹீதை உடைய பிள்ளைகள் ஒரு போதும் ஹக்கின் கோப சோதனைக்கு ஆளாக மாட்டார்கள். ஹக்கில் நெருக்கம் உண்டாகும் போது அது தன் திருவிளையாடலை தன் பக்தன் மீது எறிந்து விளையாட்டுப் பார்ப்பதேயாகும். இந்த வேளையிலேயே பக்தன் நேராக நிற்க வேண்டும் தைரியமாக நிற்க வேண்டும்.

சிந்தனை செலுத்தி செய்

ஒரு செயலை செய்யுமுன் நீ மிகவும் அதிற் சிந்தனை செலுத்து பின்னர், அதை உடனே செய்து விடாதே அதை மேல்ல‌, மேல்ல‌ச் செய். சீக்கிர‌மே செய்ய வேண்டியிருப்பின் நீ அதிற்சிந்தனை செலுத்திய வண்ணமே செய்.

எம்பெருமானார் மீது நேசம்

எம்பெருமானார் முஹம்ம‌து ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்ல‌ம் அவர்களை நேசிக்காம‌ல் இறைவனின் நெருக்கத்தை நம்மால் எந்த வகையிலும் அடைய முடியாது. ஒருவன் அவ்வாறு நினைப்பின் அவன் மதிகெட்ட மூடனாவான்.

வணங்கு

பரிபூரணமாய் நின்று இறைவனை நினை; வணங்கு. அவன் பரிபூரணமாய் நின்று உனக்குப் போதுமாவான். நூல்: ராத்திபதுல் ஹக்கிய்யத்தில் காதிரிய்யா.

ஒற்றுமை, சுதந்திர‌ம், சகோதர‌த்துவம் ம‌னிதனுக்குள் இருக்க வேண்டும்.

ஒற்றுமை, சுதந்திர‌ம், சகோதர‌த்துவம் ம‌னிதனுக்குள் இருக்க வேண்டும். ம‌னிதனின் உள்ள‌ம் பால் போல‌ இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்ற‌வன்.

கற்ற‌து கைம் ம‌ண் அளவு

கற்றது கைம் மண்ணளவாத‌லால் நீ கற்ற‌ கல்வியிற் பெருமை கொள்ளாதே.

தற்பெருமை கொள்ளாதே

உன்னிடத்தில் எவ்வள‌வு இருக்கிறதோ அவ்வள‌வுக்கு ம‌ட்டுமே நீ தற்பெருமை கொள். எல்லாம் உனக்கு தெரியுமேன தற்பெருமை கொள்ளாதே. அந்த தற்பெருமை உன்னை உயர‌விடாது தடுக்கும் தடைக்கல்லாகும்.

அவர‌வருக்கு அவரின் இடத்தைக் கொடு

குருவுக்குரிய இடத்தை குருவுக்குக் கொடு. தகப்பனுக்குரிய இடத்தை தகப்பனுக்குக் கொடு. தாய்க்குரிய இடத்தைக் தாய்க்குக் கொடு அவ்வாறு நடக்காதவன் முறை கெட்டவன் குறைகுலத்தான்.

உன்னை நீ நினைத்துப் பார்

நீ உண்மையிலிருந்து வெளியானதும் நீ உன்னைப் பொய்யென நினைத்துப் பொய்யான உல‌க வடிவில் ம‌ருண்டு விட்டாய். திரும்பவும் நீ உன்னை நினைத்துப் பார். அப்போது உன்னை நீ யாரென அறியக்கடவாய்.

கோபம்

நீ கோபப்படு. வேண்டாம் எனக் கூற‌வில்லை. உன் கோபம் மற்றவர்களையும் உன்னையும் அழிவுபடுத்தாதிருக்க வேண்டும். உன் கோபம் நன்மைக்காக இருக்க வேண்டும். கோபம் இல்லாதவனை மனிதனெனவும் கூற‌முடியாது.

சுயநலம்

உனக்குச் சுயநலம் மிக முக்கியம். ஆனால் அது பிற‌ர் நல‌த்துடன் கல‌ந்ததாக இருக்க வேண்டும். உன் சுயநலம் மற்றவனைப் பிடுங்காமலும், தாழ்த்தாமலும், அழிக்காமலும் இருக்க வேண்டும்.

ஹக்கை தரிசிப்பதே நம்மை தரிசிப்பதாகும்

ஹக்கை தரிசிப்பதே நம்மை தரிசிப்பதாகும். நம்மை தரிசிப்பதே ஹக்கை தரிசிப்பதாகும். இதுவே சாந்தியாகும்.

மூல மந்திர‌ம்

நாம் அல்லாத வேறோன்றுமில்லை என்ற மூல மந்திரம் உங்கள் ம‌னதிலும் மூச்சிலும் ஊறிப்போக வேண்டும்.

வலிமார்களின் உள்ள‌ம்

ஒரு ஷைகு தம‌து சகாக்களுடன் ஒரு வழியே நடந்து சென்றபோது ஒரு நாய் படுத்திருந்தது! அதனைக் கண்ட ஷைகு தன‌து சகாகக்களுடன் அந்த நாய்க்கு தொந்தர‌வு கொடுப்பதைத் தவிர்த்து வேற‌ வழியே சுற்றிச் சென்றார்களாம்.

வலிமார்களின் உள்ள‌ம் இப்படித்தான் இருக்கும்! பிற‌ உயிரின் மீது காட்டும் அன்பு இந்த அளவிற்கு இருக்க வேண்டும்!

நூல்: இறையருட்பா

எனைக்கண்டு மறைவதே துன்பம்

கோலத்திற் காண்பது மாயம் -‍ எனைக்

கொண்டதோர் காட்சியே காயம்

காட்சியாம் காயத்தைக் கண்டே‍ -  எனைக்

காண்பதில் ம‌ருட்சியும் உண்டே

காட்சியின் கண்ணா ம‌ருட்சி‍ ‍‍- எனைக்

காண்பதே பூர‌ணத் திர‌ட்சி

காட்சியிற் காண்பது இன்பம் ‍- எனைக்

கண்டு மறைவதே துன்பம்

(நூல்: இறையருட்பா) 

கருவுரு வாகி

ஒருவுரு வானோம்

ஒருவுரு நீங்க

அருவுரு வானோம்

(நூல்: இறையருட்பா)

பூர‌ணம் நானே - பரி

பூர‌ணன் நானே

 பூர‌ணம் நானே - பரி

பூர‌ணன் நானே

பாரெங்கும் பரந்தோங்கும்

பரமாவும் நானே

(நூல்: இறையருட்பா)

முக்காலமும் நானே - அதன்

பக்(கு)வமும் நானே

முக்காலமும் நானே- அதன்

பக்(கு)வமும் நானே

திக்கெங்கும் நிறைந்தோங்கும்

தக்கானும் நானே

(நூல்: இறையருட்பா)

நானே

உரு வாதி நானே

அரு வாதி நானே

திரு வாதி நானே

திரு நாமம் நானே

நாமாகி நின்ற - உயர்

நாமாதி நானே

ஹூவென்னுஞ் சத்து

ஓங்கிடும் நானே

சுத்த சோதி நானே

சுன் மயமும் நானே

நித்தி யனும் நானே

நிர் மலனும் நானே

(நூல்: இறையருட்பா)

ஞானம்

அறிவது மாகி

அறவமு தாகி

பரமது வாகி

*தெருள் கொள்ளுவோமே (*தெருள்: ஞானம், அறிவுத் தெளிவு)

(நூல்: இறையருட்பா)

நானே

பன் னாமம் நானே

பல வுருவம் நானே

ஒன்றான நானே

உள்ள மையும் நானே

(நூல்: இறையருட்பா)

நான்

சோதி கலீல் நான் ஆதி அவுன் நான்

ஆதி நிலை நின்று விளை யாடுஞ்சிவ னான்

(நூல்: இறையருட்பா)

அதுவே

பிறந்தாலு ம‌துவே

இறந்தாலு மதுவே

மறந்தோமே இந்த‌

நிறமாற்றம் தன்னை

(நூல்: இறையருட்பா)

 

 

துபாய் லேண்ட்மார்க்
விடுதியில்
மிகச்சிறப்புடன்
நடைபெறும்
முப்பெரும் விழா
நிகழ்ச்சியின் நேரடி
ஒளிபரப்பை கண்டு
மகிழவும்.

நேரடி ஒளிப்பரப்பு