துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஆத்ம சகோதரர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி.

கடந்த வாரம் 12/12/2014 வெள்ளியன்று, துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஆத்ம சகோதரர்களின் இவ்வருடத்திய‌ ஒன்றுகூடல் நிகழ்ச்சி காலை 08:30 மணியளவில் துபை மம்ஜார் பூங்காவில் நடைப்பெற்றது. ஒன்றுகூடலுக்கு நமது சபை ஆத்ம சகோதரர்கள், அவர்களின் குடும்ப நபர்கள் (பெண்கள், பிள்ளைகள்) மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை கண்ணியமிகு செய்யது அலி மௌலானா அவர்களும், துணை தலைவர் திருச்சி ஷாஜஹான் அவர்களும்,  நிகழ்ச்சிக்கு முன் கூட்டியே வந்திருந்த ஆத்ம சகோதரர்களின் முன்னிலையில் கோலாகலத்துடன் நிகழ்ச்சியை  துவக்கி வைத்தார்கள். அதை தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் துவங்கப் பெற்றது. விளையாட்டு போட்டிகளை மதுக்கூர் ஆத்ம சகோதரர்கள் ஹிதாயத்துல்லா, K.M.M. ஷாகுல் ஹமீது மற்றும் முதுகளத்தூர் அஹமது இம்தாதுல்லாஹ் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து, செயலாற்றினார்கள். அவர்களுடன் மற்ற சகோதரர்களும் இணைந்து உறுதுணை புரிந்தார்கள். விளையாட்டு போட்டிகளில் வந்திருந்த அனைவரும் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மதியம் 12 மணியளவில் ஜும்ஆ தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. ஜும்ஆ தொழுகைக்குப்பின் 02:00 மணியளவில் வந்திருந்த அனைத்து சகோதரர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்கள், சிறுவர், சிறிமியர் யாபேர்களுக்கும் மதிய உணவு பூங்காவிலேயே ஒன்றுகூடி உணவு அருந்த பரிமாறப்பட்டது. இதனை ஆத்ம சகோதரர்கள் மதுக்கூர் O.P.M. பஷீர் அஹமது, ஆழியூர் அபுல் பஸர், பக்கிர்ராஜ், மதுக்கூர் K.M.M. ஷாகுல் ஹமீது, மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், முதுகளத்தூர் அஹமது இம்தாதுல்லாஹ் & சகோதரர்கள் மற்றும் சில ஆத்ம சகோதரர்களும் அவர்களுடன் இணைந்து மிக சிறப்பாக நடத்தினார்கள்.

அதை தொடர்ந்து, “நல்ல தமிழ் பேசுவோமே!” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு போட்டி நடத்தப்பட்டது. இதன் நிகழ்ச்சி தொடக்கமாக, துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் கலீபா A.P. சகாப்தீன் அவர்கள் சிறிது நேரம் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் மெய்ஞ்ஞானத்தின் அவசியம் பற்றி சுருக்கமாக பேசினார்கள். அவர்களை தொடர்ந்து, முதுகளத்தூர் குழந்தைகள் நல மருத்துவர் Dr. இஸ்மாயில், M.B.B.S., D.C.H. அவர்கள் உடல் ஆரோக்கியம் பற்றியும், அதனை எப்படி நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும் மிக சுருக்கமாக உரையாற்றினார்கள். சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் நூற்களிலிருந்தும் மற்ற தமிழ் இலக்கிய நூற்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆத்ம சகோதரர்கள் “A” & “B” என‌ இரு அணியினராக‌ பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இரு அணியினர்களும் நன்றாகவும் திறமையாகவும் பதில் அளித்திருந்தாலும், “B” அணியினர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிப் பெற்றார்கள். இதனை ஆத்ம சகோதரர்கள் அதிரை ஷர்புதீன், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் மிகவும் சிறப்பாக நடத்தினார்கள்.

இதற்கிடையில் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை ஆத்ம சகோதரர் சென்னை பசீருல்லாஹ், அவருடன் இணைந்து மற்ற சகோதரர்களும் திறம்பட நடத்தினார்கள்.

இதற்கிடையில் சிற்றுண்டி, மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக வெற்றிப் பெற்ற அனைத்து சகோதரர்களுக்கும், சிறார்களுக்கான போட்டியில் வெற்றிப் பெற்ற சிறிமியர், சிறுவர்களுக்கும் மௌலானாமார்கள் முன்னிலையில், தலைவர் கலீபா சகாப்தீன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள். இலங்கை ஆத்ம சகோதரர் தஸ்ரிப் அவர்களை தலைமையாக கொண்ட  "B" அணியினர், ஒட்டு மொத்த போட்டிகளில் பெரும்பான்மையான மதிப்பெண்கள் பெற்று வெற்றிப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்பு மதுக்கூர் ஆத்ம சகோதரர் K.M.M. ஷாகும் ஹமீது நன்றியுரை கூறியவுடன் மௌலானா செய்யது அலி அவர்கள் துவா ஓதினார்கள். பின்பு ஸலவாத்துடன் ஒன்றுகூடல்  நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 

நமது துபை சபையினரால் நடத்தப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஆத்ம சகோதரர்கள், அவரது குடும்பங்கள், பிள்ளைகள், மற்றும் மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத்தின் தலைவர், உறுப்பிணர்கள், மற்றும் நமது ஆத்ம சகோதரர்களின் நண்பர்கள் பலரும் மிகவும் குதுகலத்துடன் வந்திருந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள். 

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மதுக்கூர்  M.A. சாதிக் அவர்களுடன் சகோதரர் மதுக்கூர் புகைப்பட கலைஞர் ஸ்டுடியோ ராஜா முஹம்மது அவர்களும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து எல்லோரையும் மகிழ்ச்சி திளைப்பில் ஆக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.