பரிசுத்த ஹக்கின் அவதார சந்நிதானமும் ஈருலக இரட்சகர் முஹம்மது முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசும் கௌதுல் அஹ்லம் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின் சம்பூரணப் பிரதிநிதியும் காலத்தின் இமாமும் ஆத்மஞான குருநாதருமான‌ குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் 50-ஆவது வருடக் கந்தூரி விழா வெள்ளிக்கிழமை  12-09-2014 அன்று காலை சரியாக 09:00 மணியளவில் துபை சபையில் கொண்டாடப்பட்டது. 

விழாவின் தொடக்கமாக புனித புர்தா ஷரீப் ஓதப்பட்டது.  அதை தொடர்ந்து விழா நிகழ்ச்சி 10:00 மணியளவில் சங்கைபொருந்திய மௌலானாமார்கள் முன்னிலை வகிக்க‌ தொடங்கப்பெற்றது. விழாவிற்கு துபை சபையின் தலைவர் கலீபா A.P. சகாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். விழாவின் தொடக்கமாக "வஹ்தத்துல் வுஜூத்" பாடலை துபை சபையின் முன்னனி பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் பாடினார்கள். அதனுடைய தமிழாக்கத்தை ஆத்ம‌ சகோதரர் ஆழியூர் அபுல் பஸர் ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் வாசித்தார்கள். அதை தொடர்ந்து ஞானப்பாடலை ஆத்ம சகோதரர் மதுக்கூர் ஷாகுல் ஹமீது ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் பாடினார்கள். மேலும், விழா நாயகரை பற்றிய சில கீதங்கள் முன்னனி பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல் காதிரிய்யி அவர்களால்  பாடப்பட்டது.

சொற்பொழிவு நிகழ்வு வரிசையில் கலீபா A.P. சகாப்தீன் ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் தலைமையுரை மற்றும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து, மதுக்கூர் ஜனாப் ராஜா முஹம்மது ஹக்கியில் காதிரிய்யி அவர்கள் ஞானத்தின் அவசியத்தைப் பற்றியும், தந்தை நாயகம் (ரலி) அவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார்கள். அதனை தொடர்ந்து மன்னார்குடி ஜனாப் ஷேக்மைதீன் ஹக்கியில் காதிரிய்யி அவர்கள் விழா நாயகரின் ஞான சிறப்புக்களை பற்றியும், வாழும் முகையத்தீனாக இருந்து வரும் நம் ஆத்ம குருபிரான் சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்கள் தன் தந்தை நாயகத்திடமிருந்து கற்றுக் கொண்ட ஞான சிறப்புக்களைப் பற்றியும் மிகவும் இனிமையாக இயம்பினார்கள். அடுத்து வந்த பேச்சாளர் வரிசையில் அதிரை ஷர்புத்தீன் ஹக்கியில் காதிரிய்யி அவர்கள் இவ்விழா நாயகர் ஆத்மஞான குருநாதருமான‌ குத்புல் அக்தாப் ஜமாலிய்யா செய்யிது யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களைப் பற்றிய சிறப்புக்கள், மற்றும் அவர்களைப்பற்றிய விரிவான குறிப்புக்கள் அடங்கிய மலர் ஒன்று தொகுக்கப்பட்டு, அச்சிட்டு அதன் பிரதிகளை திருமுல்லைவாயிலில் நடைபெறும் இவ்விழா நாயகரின் கந்தூரி விழாவில் வெளியீடப்படுவதையும் எடுத்துரைத்தார்கள். (மலர் வெளிவரும் கூட்டு முயற்சியில் சகோதரர் அதிரை ஷர்புத்தீன் பங்கும் முக்கியமானதாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).

நிகழ்ச்சியின் இடையே, மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல் காதிரிய்யி மற்றும் மதுக்கூர் ஷாகுல் ஹமீது ஹக்கியுல் காதிரிய்யி ஆதியோர் புகழ்பாடல்கள், மற்றும் ஞானப்பாடல்களை பாடினார்கள். அதையடுத்து, மதுக்கூர் ஆத்ம சகோதரர் வாவா முஹம்மது ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் விழா நாயகரைப் பற்றியும், நமது சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களைப்பற்றியும் சிறிது நேரம் உணர்ச்சி ததும்ப‌ உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து, மலேசியாவில்  30-09-2014 அன்று நமது சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்கள் திருக்கரத்தால் வெளியிடப்பட்ட அவர்கள் இயற்றிய ஞானப்பாடல்களின் தொகுப்பாகிய "இறையருட்பா" இசை குறுந்தட்டு மௌலானாமார்களுக்கும், மற்றும் ஆத்ம சகோதரர்களுக்கும் வழங்கப்பட்டது.

விழாவின் இறுதிக்கட்டமாக நன்றியுரை தலைவர் கலீபா சகாப்தீன் ஆற்றியபின் மௌலவி ஆலிம் அப்துல் ஹமீது நூரி ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் துவா ஓதியதோடு, ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சி 12:15 மணியளவில் (அன்றைய குத்பா தொழுகைக்கு முன்) இனிதே நிறைவுற்றது.  இவ்விழாவிற்கு வருகை புரிந்திருந்த ஆத்ம சகோதரர்கள், அஹ்பாபுகள், மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் கந்தூரி உணவு (தப்ரூக்) மற்றும் தேநீர், இனிப்புக்கள் யாவும் வழங்கப்பட்டது.  இதனை சபையின் ஆத்ம சகோதரர்கள் மதுக்கூர்  பஷீர் ஹக்கியுல் காதிரிய்யி மற்றும் அவருடன் இணைந்து மதுக்கூர் நத்தர்ஷா ஹக்கியுல் காதிரிய்யி, மதுக்கூர் அப்துர் ரஹ்மான் ஹக்கியுல் காதிரிய்யி, திருச்சி சாதிக் அலி  ஹக்கியுல் காதிரிய்யி இவர்களுடன் சில ஆத்ம சகோதர‌ர்களும் சேர்ந்து மிகவும் சிறப்பாக செயலாற்றினார்கள்.

இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும், விழா நிகழ்ச்சியில் செயலாற்றிய ஆத்ம சகோதரர்களுக்கும் விழா நாயகரின் பொருட்டால் எல்லா நலன்களும், வளங்களும்  பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக.. ஆமீன்.

புகைப்படங்கள்:

விழாவின் தொடக்கமாக புனித புர்தா ஷரீப்...... 

"வஹ்தத்துல் வுஜூத்" அவை முன்னனி பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது...

துபை சபையின் தலைவர் கலீபா A. P. சகாப்தீன் அவர்கள்....

 

 விழாவிற்கு வருகை தந்துள்ள துபை முரீதின்கள் மற்றும் அஹ்பாபுகள்.....

மன்னை ஷேக்மைதீன் அவர்கள்....

 

மதுக்கூர் ராஜா முஹம்மது அவர்கள்.....

மதுக்கூர் வாவா முஹம்மது அவர்கள்......

"இறையருட்பா" குறுந்தட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சி....