துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானச் சபையில் 15-08-2014 வெள்ளிக்கிழமை அன்று மெய்ஞ்ஞான சபையினரால் அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை, மதரஸத்துல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாஸீன் அரபுக் கல்லூரி, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை ஆகியவற்றின் நிறுவனத் தலைவரும் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஷெய்குமாகிய சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம்  அவர்களின் 79-வது உதயதின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழா நாயகரின் நிகழ்ச்சியோடு ஆகஸ்ட் மாதாந்திர கூட்டமும் சேர்த்து நடத்தப்பட்டது. அன்று காலை சரியாக 09:00 மணிக்கு விழாவின் தொடக்கமாக புனித "புர்தா ஃஷரீப்" ஓதப்பட்டு, அதை தொடர்ந்து "கஸீதத்துல் அவ்னிய்யா" மற்றும் தர்பார் நாயகம் அவர்களின் வாரிதாத் ஓதப்பெற்று, சரியாக 10.30 மணிக்கு விழா நிகழ்ச்சி கிராஅத்துடன் தொடங்கப்பட்டது. கிராஅத்தை மௌலவி ஆலிம் அப்துல் ஹமீது நூரி ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் ஓதினார்கள். இப்பெருவிழாவிற்கு சங்கை பொருந்திய மௌலானாமார்கள் முன்னிலை வகித்தார்கள். கண்ணியமிகு செய்யது அலி மௌலானா அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். விழாவின் முதல் கட்டமாக கிராஅத்திற்கு பின் "வஹ்தத்துல் வுஜூத்" பாடலை துபை சபையின் முன்னனி பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் பாடினார்கள். அதனுடைய தமிழாக்கத்தை ஆத்ம‌ சகோதரர் ஆழியூர் அபுல் பஸர் ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் வாசித்தார்கள். அதை தொடர்ந்து நபி புகழ் பாடலை ஆத்ம சகோதரர் மதுக்கூர் சிராஜுதீன் ஹக்கியுல் காதிரிய்யி அவர்கள் பாடினார்கள். பின்பு ஆத்மீக பாடல்களும் பாடப்பட்டது.

சொற்பொழிவு நிகழ்வு வரிசையில் செய்யது அலி மௌலானா அவர்கள் தலைமையுரை மற்றும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதனை தொடர்ந்து, இலங்கையை சார்ந்த ஜனாப் முஹம்மது தஸ்ரிஃப் ஹக்கியில் காதிரிய்யி அவர்கள், மன்னார்குடி ஜனாப் ஷேக்மைதீன் ஹக்கியில் காதிரிய்யி அவர்கள், மதுக்கூர் ஜனாப் ராஜா முஹம்மது ஹக்கியில் காதிரிய்யி அவர்கள், திருச்சி ஜனாப் அப்பாஸ் ஷாஜஹான் ஹக்கியில் காதிரிய்யி அவர்கள் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினார்கள். மேலும் சொற்பொழிவு ஆற்ற ஆவலுடன் இருந்த நம் ஆத்மீக சகோதரர்களின் எண்ணிக்கை நேரமின்மையால் குறைக்கப்பட்டது.

விழாவின் இறுதி கட்டமாக நன்றியுரை மதுக்கூர் ஜனாப் அமீர் அலி ஹக்கியில் காதிரிய்யி அவர்கள் ஆற்றினார்கள். பின்பு "தவ்பா பைத்" ஓதப்பட்டு விழா நிகழ்ச்சி 12:15 மணியளவில் (அன்றைய குத்பா தொழுகைக்கு முன்) இனிதே நிறைவுற்றது.

இப்பெருவிழாவிற்கு ஆத்மீக சகோதரர்கள் மற்றும் அஹ்பாபுகள் ஏராளமானோர் வருகை புரிந்திருந்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் கந்தூரி (மதிய) உணவு பரிமாறப்பட்டது.

இவ்விழா நிகழ்ச்சி நம் அனைத்து சகோதரர்களுக்கும் அன்றைய தினம் பெருநாள் தினமாகவே இருந்தது. ஆம். இப்பெருவிழா நம் நாயகரின் முரீதின்களுக்கு "பெருநாள்" தான்.   

 

 விழாவிற்கு வருகை தந்துள்ள ஆத்ம சகோதரர்கள் மற்றும் அஹ்பாபுகள்...

ஏகத்துவ பாடல், வஹ்துத்துல் வுஜூது அவை முன்னனி பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது அவர்கள்..

 தலைமை உரை, சொற்பொழிவு கண்ணியமிகு செய்யிது அலி மௌலானா அவர்கள்....

 சிறப்புரை மரியாதைக்குரிய திருச்சி ஷாஜஹான் அவர்கள்....

Compiled & uploaded the above by Madukkur Adam A. Abdul Kuthoos, Qaquil Qadhiriyi (Site Developer) Camp: Dubai, UAE.