இலங்கையில் வெலிகாமாவில் சங்கைமிகு ஷெய்கு நாயகமவர்களின் திருஇல்லத்தில் நடைபெறும் மீலாது நபி பெருவிழாவின் நேரடி ஒலிபரப்பு

அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்கா ஏற்பாடு செய்து நடத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாத் தின விழா வெலிகாமம், இலக்கம் 52, புஹாரி மஸ்ஜித் மாவத்தை, "பைத்துல் பரகாஹ்" இல்லத்தில் அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மிகத்தலைவர் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் அல் ஹஸனிய்யுல் அல் ஹுஸைனிய்யுல் அல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) அவர்களின் தலைமையில் எதிர் வரும் நவம்பர் 2017, 24-ஆம் திகதி முதல் 27-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. புனித "புர்தா ஷரீப்",  "ரசூல் மாலை" அத் தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் புனித "ராத்திப் மஜ்லிஸ்", அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் புகழ்பாடும் “ஸுப்ஹான மௌலூத்” இவைகளை தொடர்ந்து 27- ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலமாக்கள் கலந்து கொள்ளும் பயான் நிகழ்ச்சி நடைபெறும்.

குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் அல் இக்துத் தராரீ ஃபீ ஷரகிஸ் ஸஹீஹி லில் இமாமில் புகாரீ(ரலி) (புகாரி ஷரீப் அரபு ஷரஹு 1 ஆம் பாகம்), ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் ஞான வெளிப்பாடாகிய இறைவலிய் ஸெய்யித் முஹம்மத் மௌலானா, தாகிபிரபம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கம் ஆகிய நூற்கள் வெளியிடப்படும்.

Live streaming video by ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, துபை.

உயர்மிகு தலைமை:

குத்புஸ்ஸமான்,ஷம்ஸுல் வுஜூத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்

உரையாற்றுவோர்:

மௌலவி, ஹாபிழ், M. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஆலிம் அவர்கள் (தலைவர், தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் பேரவை, சென்னை)

அல்ஹாஜ், ஹாபிழ், மௌலவி, P.A. காஜா முயீனுட்தீன் ஆலிம் பாக்கவி அவர்கள் (தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா)

மௌலவி, M. முஸ்தபா மஸ்லஹி M.A. அவர்கள் (பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அறபுக்கல்லூரி, தூத்துக்குடி)

நஜ்முல் உலமா, அல்ஹாஜ் மௌலவி முஹாஜிரீன் (நத்வி) ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் (தலைவர், மஜ்லிஸுல் உலமா, கொழும்பு)

அல்ஹாஜ், மௌலவி அஹ்மது பழீல் ஆலிம் காஸிமிய்யி அவர்கள் (கலீபதுர் ரிபாயீ)

ஆலிம் புலவர், கலீபா, ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்

நபிபுகழ்:

கலைமாமணி, அல்ஹாஜ், இறையன்பன் குத்தூஸ் மற்றும் குழுவினர் ‍ (சென்னை)

அமான் ரிபாய் காதிரி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Read more...