மனிதர்களில் மூன்று வகையினர் இருக்கிறோம் அன்பர்களே !

முதலாமானவர் .... இயல்பாகவே நல்லவர்கள்! (இவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் ,கண்காணிப்பும் தேவை இல்லை )

இரண்டாவது ...... கண்காணிப்பின் மீதும்  கட்டுப்பாட்டின் மீதும் நல்லவர்களாய் இருப்பவர்கள் .

மூன்றாவது ...... யார் கண்காணித்தாலும் கட்டுப்பாடு விதித்தாலும் சட்டை செய்யாமல் இருப்பவர்கள் !

இதில் முதலாமவர் நம்மில் இப்போது இருப்பது மிக மிக குறைவு !

மூன்றாமவர் பற்றி பேசி பயன் இல்லை !

இரண்டாவதில் உள்ளவர்கள் நாம் எல்லாரும் என்று நினைக்கிறேன் !

அதாவது கண்காணிப்பின் மீதும் ,,கட்டுப்பாட்டின் மீதும் ..தான் நாம் இருக்கிறோம் !

உதாரணமாக…….

பெற்றோர்கள் ,திட்டுவாங்க என்று தொழுக போவது….

இமாம் கண்டிப்பாங்க என்று போவது……பக்கத்து வீட்டுக்காரங்க ,,தப்பா நினைப்பாங்க  …என்று போவது ,,

அல்லது ..நம் இமேஜ் கெட்டுப்போய் விடக்கூடாது என்று போவது,,

அல்லது நம் தொழில் விருத்தி ஆகணும்,

குடும்பம் நல்லா இருக்கணும் இப்படி பல சுய நலன்களை ,கருத்தில் கொண்டுதானே தொழுக போகிறோம் ?

இயாக்க நஹ்புது,,,உன்னையே ,உனக்காக ,,வணங்குகிறோம் என்று யாராவது தொழுகிறோமா ?

மன சாட்சியை தொட்டு சொல்லுங்க
ஒப்புக்கொண்டாலும் ,,ஒப்புக்கொள்ளாவிட்டாலும்,,,நம்மில் பெரும்பாலானவர்களின் நிலை இதுதானே ?

யாரோ நம்மை கண்காணிக்கிறார்கள்...போகாவிட்டால் குறை சொல்வார்கள் கஷ்ட்டம் வந்து விடுமே ,,இமேஜ் வீணாகி விடுமே ,,என்றுதானே வணங்குகிறோம்?

இல்லையெனில் நன்மையை கருதி -- அவ்வளவு நன்மை ,இவ்வளவு நன்மை என்றுதானே வணங்குகிறோம் ?

அல்லாஹ்வுக்கு மாத்திரம் என்பது பொய் தானே ?

மூன்றாவது மனிதர்கள், அதாவது இப்போதுள்ள இளையவர்கள் நிறைய பேர் யாரையும் மதிக்க வேண்டியதில்லை ..யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை !

அவர் என்ன பெரிய மனிதரா ? யார் சொன்னா..? வரட்டும் பார்க்கலாம் ..!

நான் ரொம்ப படித்திருக்கிறேன் ..இவர் என்ன படிக்காதவர் தானே ..

இவருக்கு என்ன தெரியப்போகிறது ? மூட நம்பிக்கையில் ஏதோ உளறுகிறார்

குர்ஆன் ..ஹதீஸ் ஆதாரம் தரவில்லையே ..

இப்படி ஏதேதோ ,,தன்னை மேதாவியாக நினைத்துக் கொண்டு எதற்கும் கட்டுப்படாதவர்கள் !

வழிகெட்டுப் போனவர்கள் அனைவருக்கும் ஒரு வலியுன் முர்ஷித் ( ஷெய்கு) இருக்க மாட்டார்கள்  என்று அல்லாஹ் சொல்கிறான் திரு வசனத்தில் !

தரீக்கா ,என்றால் ஏதோ ஓதி  எழுதி பார்ப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் !

ஓதி  எழுதி  குணமாக்குவது என்பது தல்சுமாத் என்ற ஒரு காரியம் ..ஒரு செயல் அவ்வளவுதான்.

ஹஜ்ரத் கௌஸ் நாயகம் சொல்லி இருக்கிறார்கள் ..இஸ்லாமில் ஷரீஅத் என்றால் விதை ,மரம் ,அதில் தரீகா கிளைகள் என்று !

ஷரீஅத் என்ற விதை விதைத்து ,,ஷரீஅத் என்ற மரம் வந்தால்,,தரீக்கா என்ற கிளைகள் ,வழிகளில் விளையும் கனிகள் தான் ஆன்மீக ஞானம் !!

தரீகா என்றால் கல்பை பரிசுத்தப் படுத்துவது ,,

திக்ர் ,,முராக்கபா ,,முஜாகதா ..என்ற வழிகளின் மூலம் ,,தஜ்க்கியத்துன் நப்ஸ் என்ற உளத்தூய்மை அடைய ஒரே வழி ஒரு தரீகாவின் வலியுன் முர்ஷித் ஒரு ஆன்மீக குரூ ..ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவை !

நம் அகம்,புறம் இரண்டையும் கண்காணித்து   நம்மை சீர் செய்ய, நம்மை சுத்தப்படுத்த அவசியம் தேவை !

ஹஜ்ரத் யூசுப் நபி அலைஹிஸ்ஸலாம்,, ராணி ..,ஜூலைஹா அலைஹிஸ்ஸலாம் அறையில் ,தவறு நடக்க இருந்தபோ து ,,

என் ரப்பின் திருஷ்ட்டாந்தத்தை ,,நான் காணாவிட்டால்,,தவறி இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்கள் ..இதை சற்று சிந்தித்து பாருங்கள் ,,

ஒரு அழகான இளைஞர் ,,ஒரு அழகான இளவரசி ,,பூட்டிய அறையில் சந்தோஷத்திற்கு அழைத்தால்  எப்பேர்ப்பட்ட ,மனிதரும் ,தடம் பிறழ்வார்கள் அல்லவா ?

அந்த நேரத்தில் ,,அவர்கள் தந்தையார் ஆன யாகூப் அலைஹிஸ்ஸலாம் அத்தாட்சியாக ,சில நிலைகளை கொண்டு தோற்றமளித்து உணர்த்தியதைத்தான் ,,என் ரப்பின் திருஷ்ட்டாந்தம் ,என்று சொல்லி இருக்கிறார்கள் யூசுப் அலைஹிஸ்ஸலாம் !

யாகூப் அலைஹிஸ்ஸலாம் தான் அவர்களுக்கு  குருஆகவும்,,வழிகாட்டியாகவும் ..வலியுன் முர்ஷித் ஆகவும் இருந்திருக்கிறார்கள் !

ஆகவே ,,அன்பர்களே,,

ஆன்மிகம் என்பது  உள்ளத்தை தூய்மை படுத்துவது தான்  அது தரீகா வழியில் தான் கிடைக்கும்!  இது பெரிய கடல் !

இதில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் தான் சொல்ல முடியும் !

நுனிப்புல் மேய்ந்தவர்கள்  சொல்ல முடியவே முடியாது !

காமிலான ஷெய்கு ஒருவரைத்தவிர அந்த முத்துக்களை தரவே முடியாது !

அவர்கள் சொன்னால் ..சொன்னதுதான் ! அதற்கு ஆதாரம் கேட்பதோ,

அதை சந்தேகப்படுவதோ முட்டாள்தனம் !

 

தொகுத்தளித்தவர்:

----- அகநூல் என்ற பதிவிலிருந்து ஆதம் A. அப்துர் ரவூப். ஹக்கியுல் காதிரி.