மனமானது பாராட்டுகளைப் பெற்று ஃபிர்அவ்ன் ஆகிவிட்டது. அதாவது ஆணவம் கொண்டுவிட்டது.
நீ எளிமையை ஏற்று தாழ்ந்தவனாகிவிடு. தலைமையை வேண்டாதே.
முடிந்தவரை நீ அடியானாக இருக்க முயற்சி செய். அரசனாக முயலாதே. உன்னிடம் கருணை புரியும் தன்​மையும் அழகிய முறையில் பழகுதலும் இல்லாமல் போனால்
உனது நண்பர்களின் மனம் சோர்ந்து போகும். உன்னைவிட்டு அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
 
துறவிகளின் விவகாரம் உன் அறிவுக்கு அப்பாற்பட்டது.
ஏளனமான பார்வையோடு அவர்களைப் பார்ப்பதை நீ விட்டுவிடு.
துறவுகோலம் என்பது உலகியல் விவகாரத்தை விட தனிப்பட்டதாகும்.
அவர்கள் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடமிருந்து வெகுமதி பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
துறவிகள் எனப்படுவோர் பொருளும் பதவியும் மட்டுமின்றி இறைவனிடமிருந்து ஒரு மிகைத்த உணவைப் பெறுபவர்களாய் இருக்கின்றனர்

அலி (ரலி) ​​வைப் போல நீ வெறுமையாகி விடுவாயானால் இந்தப் பாதையிலே தனித்த ஈடு இணையற்ற ஒரு மனிதனாக மாறிவிடுவாய். அல்லாஹ்வைத் தவிர
மற்றவைகளை தவிர்த்து விட முயற்சிசெய். இந்தப் பாழடைந்துபோகும் உலகத்தை விட்டு மனதை விளக்கிக் கொள்.
 
-மஸ்னவி மௌலானா ரூமி (ரஹ்)