இ​றைவன் ​பேரருளாளன்:

அவன் அருள் நி​றைந்தவன் என்ப​தை அவனது அருள்ம​றை குர்ஆன் வசனங்கள் மூலமாகவும் குர்ஆனின் ​செயல்வடிவமாகிய அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அ​லைஹி வஸல்லம் அவர்களின் அ​மைதி வாழ்வின் மூலமாகவும் அறிந்து​கொள்ளலாம். 

அல்குர்ஆனின் திருவசனங்கள் மனிதனின் இதயத்​தை நேரடியாக ஊடுருவும் சக்தி படைத்தவை. அதனை ஆர்வத்தோடு படித்து ஓதும்போது இறைவன் மனிதனிடம் என்ன விரும்புகிறான் - அவனை எவ்விதம் இடைஞ்சலற்ற வாழ்வு வாழவைக்க விரும்புகிறான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ரஹ்மானின் அன்பும் கருணையும் அதில் பொதிந்து ஓடுவதை விழிகளில் துளிகள் கசிய ரசிக்க முடியும்.

குர்ஆனின் வரிவடிவம்தான் இஸ்லாம். ஆனால், இஸ்லாம் இன்று முரடர்களின் மார்க்கமாக எண்ணப்படுகிறது.

அன்பும் கருணையும் போதிக்கும் மார்க்கம், வம்பும் வழக்கும் கொண்டோரின் கூடாரமாக மதிக்கப்படுகிறது.

காரணம்:

குர்ஆனையும் பெருமானாரின் வாழ்வையும் ஆழாமாக பார்க்காத அரைகுறை அறிஞர்களின் தவறான விளக்கங்கள் தந்த விளைவுகளால்தான்.

தந்தை ஒருவர் தன் மகனைப் பார்த்து இதைச் செய் என ஏவுவதிலும், இதைச் செய்யாதே என ஏவுவதிலும் அன்புதான் அடிநாதமாக இருக்கிறது.