வஹ்ததுல் வுஜூது

ஏக காட்சி


அதுவே ஏகமயமானது (அனைத்தும் அதுவேயாதலால்) 
அதனைத் தவிர்ந்த வேறு பொருட்கள் அதனுக்கு (அயலாய்) இல்லை.

அதுவே பூரணமானது. அதுவே குறுக்கமானதன்று. இப்பொழுது அது மாறுபட்டுள்ளது. 

எனினும் அது பெருமைக்குரிய பழமையை (முன்னிருந்ததை)ப் போன்றது.

எங்கே? என்பதும் ஒன்றைப் போன்றது என்பதும் ஒன்றைக்கொண்டு (ஆனது) என்பதும் எப்படி? என்பதும் அதற்கில்லை.

(நான், நீ, அவன், அவள், நாங்கள், நாம், அவர்கள், இவர்கள், அது, இது, அவை, இவை முதலாம்)

பிரதிப் பெயர்கள் அனைத்தும் அதனைக் கட்டு(மட்டு)ப்படுத்துபவையன்று.

உள்ளாலும் வெளியாலும் அதன் தாற்பரியத்திலே அதற்கு (இப்படித்தான் எனும்) சுபாவம் (பாங்கு) இல்லை.

அதன் பிரணவ உள்ளமை பரிசுத்த சம்பூரணமாகும். ஏக மயத்தில் எவன் தன்னை அழித்தானோ

அவனிடத்திருந்து அனைத்தும் தோன்றும்; வெளியாகும்.

(முற்றும்)