மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்

 

மூக்கிரட்டை கீரையின் விதைகள் ஆண்களின் இயலாமையை போக்க வல்லது. மேலும் விரைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்வது. விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆரோக்கியத்தையும் பெருக்க வல்லது. ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் தரவல்லது. 
http://www.grannytherapy.com/tam/wp-content/uploads/2012/02/boerhavia-4.jpeg
தோல் நோய்களுக்கு ஓர் நல் மருந்தாவது குறிப்பாக அரிப்புடன் கூடிய தோல் நோய் மற்றும் "கினியாவார்ம்'' என்னும் படை நோயைக் குணப்படுத்த வல்லது. சிறு நீரகக் கோளாறுகளான சிறுநீரக வீக்கம், சிறுநீரக கற்கள், சிறு நீரகப் பழுது ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.

பித்தப்பையை சரியாக இயங்க வைப்பது. அதிக மாதவிடாய் ஒழுக்கைத் தணிக்க கூடியது. ஈரல் கட்டிகளைத் தடை செய்ய வல்லது ரத்தத்தில் உள்ள "யூரிக்'' அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவுவது. மூக்கிரட்டை வாதத்தையும் (வாயு) சீதத்தையும் (குளிர்ச்சி) கட்டுப்படுத்த உதவுவது. 

இதனால் வாயுப் பிடிப்பால் ஏற்படும் வலிகளையும் சீத மிகுதியால் ஏற்படும் சளி, இருமல், ஆஸ்துமா நோய்களும் குணமாகும். 

* மூக்கிரட்டைக் கீரையைச் சுத்தம் செய்து சமைத்தோ அல்லது சமூலத்தை (இலை, கொடி, வேர், காய் அனைத்தும்) சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு மூன்று முதல் ஐந்து கிராம் வரை அந்தி சந்தி என இருவேளை ஒரு மண்டலம் சாப்பிடுவதால் மூக்கை அடிப்படையாக கொண்ட சுவாசப் பிணிகள் அகலும். 

* மூக்கிரட்டைச் சமூலத்தை தினம் இருவேளை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் முற்றிலும் நீங்கி உடல் அழகும் இளமையும் பெறும். 

* மூக்கிரட்டை வேரைக் குடிநீராக்கிக் குடிப்பதால் (5 கிராம் முதல் 10 கிராம் வரை) கீல்வாதம், இரைப்பு நோய், காமாலை, நீர்க்கட்டு, பெருவயிறு, சோகை ஆகியன குணமாகும். 

* மூக்கிரட்டை கீரையின் வேரை சிதைத்து சிற்றிமணக்கு எண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் உள்ளுக்கு கொடுக்க கழிச்சலை உண்டாக்கும். 

* இதனால் உடலில் தேங்கிக் கிடக்கும் நச்சுக்கள் மலத்துடன் வெளியேறுவதால் உடலில் ஏற்படும் தோல் நோய்கள், நமைச்சல், வாத நோய்கள் அத்தனையும் போகும். 

* இதை உள்ளுக்குள் கொடுக்கும் போது வயது, எடை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உபயோகிப்பது நலம். முதலில் சோதனைக்காக சிறிதளவு கொடுத்துபின் அளவைத் தீர்மானிக்கலாம். சில வாரங்கள் இதைத் தருவது நலம் பயக்கும்.