கண்வலி வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது

 
எல்லா கோவில்களிலும் ஒவ்வொரு மூலிகை  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வோர் மூலிகைக்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. முன்பு ஆரோக்கியத்திற்கும் கோவில் ஓர் இருப்பிடமாக இருந்துள்ளது.
 
சிவன் கோவிலுக்குப் போனால்,அங்கே வில்வம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. சிவனுக்கு குழந்தைகள் இருக்கிறது. எனவே குழந்தைகள் வேண்டுமா?வில்வத்தை சாப்பிடுங்க குழந்தை பிறக்கும்.
 
  கண்களில் உள்ள வட்டத்திற்கு நந்தி வட்டம் என்று பெயர்.கண்களிலும்,கண்கருவிழியிலும் ஏற்படும் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் வன்மை வாய்ந்தது.எல்லா சிவன் கோவில்களிலும் இருக்கும்.அடுக்கு நந்தியாவட்டை என்றும்,சாதாரண நந்தியாவட்டை என்றும் இருவகை உண்டு. இதில் சாதாரண நந்தியாவட்டைக்கு அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்களை இரவில் தண்ணீரில் போட்டு,காலையில் எழுந்தவுடன்,அந்தப் பூக்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டு,அந்தப் பூக்கள் ஊறிய தண்ணீரில் கண்களை கழுவி வந்தால்,கண்ணில் உண்டாகும் கண்குற்றங்கள் அனைத்தும் தீரும்.கண் வலியும் தீரும். 
 
நந்தியாவட்டை
 
 
 நீலாஞ்சனக்கல் என்பது அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் கண்கள் நன்றாகத் தெரிவதற்காக கண்களின் கீழ்ப் பட்டையிலும்,மேல் பட்டையிலும்,புருவத்திலும் தீட்டி வந்துள்ளனர்.அபிராமி அம்மையை அஞ்சன விழியாள் என்று அழைப்பர்.
 
இந்த நீலாஞ்சனக்கல்லை பன்னீருடன் உரசி கண் உள்பட்டை,மேல் பட்டை போன்ற இடங்களில் தடவி வந்தால் இறக்கும் வரை கண்பார்வை மங்காமல் இருக்கும்.  

இந்த நீலாஞ்சனக்கல்லை முஸ்லீம் அன்பர்கள் சுருமாக்கல் என்று அழைப்பர். இதை ஒவ்வொரு தொழுகையின்போது கண்களுக்குத் தடவுவது தலையாய கடமைகளாய் சொல்லி வைத்துள்ளார்கள்.