தொகுப்பு: மதுக்கூர் ஆதம் அப்துல் குத்தூஸ் - Camp: Dubai.

தொகுப்பு: மதுக்கூர் ஆதம் அப்துல் குத்தூஸ் - Camp: Dubai.

மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரியில் ஏழை எளிய இஸ்லாமிய மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியும் உலக கல்வியும் 100% இலவசமாக கற்பிக்கப்படுகின்றன. இந்த அறபுக்கல்லூரி 1994-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. (திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது). இதன் ஸ்தாபகர், சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் ஆவார்கள். இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பரிசுத்தமான திருக்குடும்பத்தில் 34ம் தலைமுறைத் தோன்றலாகவும் வலிகள் கோமான் கௌதுல் அஹ்லம் முஹியுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் 21ம் தலைமுறையாய் உதித்தவருமாவார்கள்.

நோக்கங்கள்

  • உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்பது நபிமொழி. நபிமார்கள் எந்தெந்தக் காலங்களில் வாழ்ந்தார்களோ அந்தந்தக் கால மக்களில் தலைசிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்தார்கள். அதே போன்று உள்ளம் பரிசுத்தமானவர்களாக விளங்கினார்கள். நபிமார்களின் வாரிசுகளான உலமாக்களும் நபிமார்களைப்போன்றே அறிவில் தலைசிறந்தவர்களாக, உள்ளம் தெளிவானர்களாக இருக்க வேண்டும்.
  • மார்க்க அறிஞர்கள் மார்க்க அறிவில் முழுமை பெறுவதோடு உலகக் கல்வியிலும் நிறைவுபெற உலகக் கல்வி வேண்டும். உள்ளம் தெளிவு பெற்று ஒளிவு பெற ஆன்மிக ஞானக் கல்வியைக் கற்க வேண்டும். 
  • உலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சாந்தி சமாதான நிலவ, சமத்துவம், சகோரத்துவம், மனித நேயம் மதநல்லிணக்கத்திற்காக பாடுபடும் உலமாக்களை (அறிஞர்களை) உருவாக்க வேண்டும் என்ற சீரிய நோக்கங்களையும் முன் வைத்து இந்தக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு இறையருளால் நடை பெற்று வருகிறது.

பாடத்திட்டம்:

மாணவர்களுக்கு அடிப்படை கல்வி, தீனிய்யாத் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, குர்ஆன் ஓதக் கற்பிக்கப்பட்டு மவுலவி ஆலிம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.  மேலும் 8, 10, +2 அரசு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறச் செய்யப்பட்டு, B.Com போன்ற பட்டம் பெறவும் உதவுகிறார்கள்.  அத்தோடு தொழிற்கல்வி, கணினி அறிவு போதிக்கப்படுகிறது. மதுரஸாவில் கோடைகாலப் பயிற்சி வகுப்புகளும் நடத்தபடுகின்றன.

மேலும் அப்சலுள் உலமா படிப்புக்காக சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறார்கள்.  இக்கல்லூரி மாணவர்கள் அப்சல் உலமா தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

மாணவர்சேர்க்கை:

ஏழை / அநாதை மாணவர்கள், குர்ஆன் ஓதத் தெரிந்தவர், தெரியாதவர் 6ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுக்கட்டணம், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் எவ்விதக் கட்டணமும் இல்லை.  உணவு, உடை, உறைவிடம், மருத்துவச் செலவு, முடிதிருத்துதல், துணி துவைத்தல், சீருடை & உடுப்புகள், நோட்டு புத்தகங்கள் என‌ அணைத்தும் முற்றிலும் இலவசம். 

மாணவர்களுக்கான வசதிகள்: 

  • அறிவார்ந்த ஆலிம்பெருமக்கள், தன்னார்வமிக்க ஆசிரியப்பெருமக்கள்
  • காற்றோட்டமான தனித்தனி வகுப்பறைகள், தங்குமிட வசதி
  • வளாகத்தினுள்ளே மஸ்ஜிதுல் ஹக்கிய் பள்ளிவாசல்
  • ஆயிரக்கணக்கான புத்தகங்களை உள்ளடக்கிய காதிர் நூலகம்
  • சுகாதாரமான உணவுக்கூடம், குடிநீர், குளியலறை, கழிவறை
  • பரந்த விளையாட்டு மைதானம்‍ கராத்தே தற்காப்புக் கலை
  • தோட்டக்கலைப் பயிற்சி அச்சுக்கலைப் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி 

இங்கு மிகவும் தேர்ச்சி பெற்ற பதின் மூன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்/உலமாக்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 

கிப்லா ஹள்ரத்  முதல்வர் ‍ B. Com.,  Cell: 99438 59758.

அ. நைனார் முஹம்மது அன்சாரி M. Com.,  Cell: 80569 89101

தொலைபேசி எண்: 0431 2914554

நன்கொடைவழங்குவோர்:

இந்திய நாட்டு குடியுரிமை உள்ளவர்கள் நன்கொடை வழங்கலாம். நன்கொடை வழங்குவோர் கீழ்காணும் முகவரிக்கு அணுப்பி வைக்கலாம்:

Name of Beneficiary:

MADHRASATUL HASANAIN FEE JAMIA YASEEN

Account Number:

1374201555701.

Name of Bank:

Canara Bank

Address:

Chennai Broadway Branch, Chennai.

IFSC Code:

CNRB0001374.

 உள்ளூர் காசோலை (local cheque), கேட்பு வரைவோலை (demand draft) அனுப்புவோர்

 “MADHRASATUL HASANAIN FEE JAMIA YASEEN”

 என்ற பெயரில் வங்கி கணக்கு எண் 1374201555701 என்று குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

 

மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி,

சீத்தப்பட்டி பிரிவு, பூலாங்குளத்துப்பட்டி (அஞ்சல்), திண்டுக்கல் ரோடு, ஜே. ஜே. கல்லூரி அருகில்,

திருச்சிராபள்ளி ‍- 620009.

 

மின்னஞ்சல்:  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  

அலைபேசி:   9659504855 / 9941057785.

மதுரஸா அறிவிப்புகள்

 

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகத்ஹு

ந‌ம‌து உயிரினும் மேலான‌ க‌ண்மணி நாய‌கம் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மூலம் நமது சமுதாயத்திற்கு அருளப்பட்ட தியாகத் திருநாள் எனும் ஹஜ் பெருநாள் நம்மை எதிர் நோக்கியுள்ளது.

நமது மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட மார்க்க அறிவு மற்றும் அதனைச்சார்ந்த உலகக் கல்விகளை திறம்பட போதனை செய்வதற்காக அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளையின் கீழ் நமது ஷெய்கு நாயகம் அவர்களால் 1994-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட "மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாசீன் அறபுக்கல்லூரி" இப்திதா எனும் ஆரம்ப‌க்கல்வி முதல் ஆலிம் பட்டம் பெறும் வரையிலும், மேலும் உல‌‌கக்கல்வி, தொழிற்கல்வி அமைப்புடனும், மற்றும் மாணவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், கல்விக்கட்டணம் அனைத்தும் 100 சதவீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ஷரீஅத், தவ்ஹீது, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை மாணவர்கள் இளம் நெஞ்சில் பதிய வைப்பதோடு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழிகாட்டிய‌ சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவைகள் போதிக்கப்பட்டு தலைச்சிறந்த பல்கலைகழகமாக உருவாகி வருகிறது.

எங்களது இந்த‌ இலட்சியப் பாதையின் சீரிய பணிகளை திறம்பட தொடர்வதற்கும், மதரஸாவின் வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார நிதி உதவிகளை செய்து உதவிட தங்களின் நன்கொடைகள் / ஜகாத் / ஸதகா / குர்பானி பங்குகள் ஆகியவைகளை மதரஸாவிற்கு வழங்கி அல்லாஹ்வின் அருள் பெற அன்புடன் விழைகிறோம்.

தங்களது நிதி உதவிகளை கீழ்காணும் வங்கி விபரங்கள்படி நேரடியாக‌ அனுப்பலாம்:

Name of Beneficiary:  MADHRASATUL HASANAIN FEE JAMIA YASEEN
Account Number:       1374201555701.
Name of Bank:            Canara Bank
Address:                     Chennai Broadway Branch, Chennai.
IFSC Code:                 CNRB0001374.

உள்ளூர் காசோலை (local cheque), கேட்பு வரைவோலை (demand draft) அனுப்புவோர் “MADHRASATUL HASANAIN FEE JAMIA YASEEN” என்ற பெயரில் வங்கி கணக்கு எண் 1374201555701 என்று குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

மதரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி,
சீத்தப்பட்டி பிரிவு, பூலாங்குளத்துப்பட்டி (அஞ்சல்), திண்டுக்கல் ரோடு, ஜே. ஜே. கல்லூரி அருகில்,
திருச்சிராபள்ளி ‍- 620009.

மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
அலைபேசி: 9659504855 / 9941057785.

குறிப்பு:
வெளி நாட்டில் இருக்கும் முரீதீன்கள், அஹ்பாபுகள் மற்றும் அன்பர்கள் அந்த நாட்டில் இயங்கி வரும் நமது ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் தொடர்பு கொண்டு தங்களது (கூட்டு)குர்பானி பங்கினை தங்களது பெயரில் பதிவு செய்து அதற்குரிய பங்கின் தொகையை அந்நாட்டு நாணயம் நிர்ணயத்தப்படி கொடுக்கும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.