ஆசிய ஜோதி நாகூர் பேரரசர்பாதுஷா நாயகம் அவர்கள் , ஆற்றிய சொற்பொழிவிலிருந்து......


...................................விசுவாசிகளே... லா இலாஹ இல்லல்லாஹூ...
என்ற கலிமாவை சொல்லி விசுவாசம் கொண்டவர்களே..... அதில் இருக்கும் சகல விஷயங்களையும் நீங்கள் ஏன் விளங்கிக்கொள்ளவில்லை?.................................
1...இந்த வாக்கியத்தில் இருக்கும் "லா" என்பது நாசூத்துடைய உலகத்தை குறிக்கின்றது.
.......................... மண், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது..இந்த புவியுலகையும்,அதன் மீடு அசைந்தும், அசையாமலும், இருக்கும் அத்தனை பொருட்களையும் குஇப்பதுதான் "நாசூத்"எனும் பதமாகும்..இந்த நான்கு பூதங்களின் சாரத்தில் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்..............
.......இந்த நான்கு பூதங்களும் மனித உடலில் இருந்து கொண்டு தோற்றுவிக்கும் ஆசாபாசங்களைத்தான் "நப்ஸ்" எனும் "அம்மாரா" ஆகும். உலக மனிதர்களில் பெரும்பாலோனோர் இந்த நப்ஸ் அம்மாராவின் பிடியில்தான் அகப்பட்டுக்கொள்கிறார்கள்........

..2.. கலிமாவில் உள்ள இரண்டாவது சொல்லான " இலாஹ்" என்பது சூட்சம உலகத்த குறிக்கிறது....வானமென்றும், ஆலமே மலக்கூத் என்றும், சூட்சம வெட்ட வெளி என்றும் இதனை குறிப்பிடுவார்கள்.
இந்த மலக்கூத்துடைய பண்பு நன்மைகளை ஏவுவதாகும்.....
....மலக்கூத்துடைய தேகம் இன்ஸானுடைய உடலில் நிழலைப்போல குடிகொண்டுள்ளது. உரைக்குள் இருக்கும் வாளுக்கு இதனை ஒப்பிடலாம்...........................................
..3..கலிமாவின் மூன்றாவது சொல்லாகிய "இல்லா" என்பது "ஜபரூத்"துடைய உலகத்தை குறிக்கிறது...... இதுதான் "ஆன்மா"வின் உலகம்....ஜபரூத்துடைய உலகின் நப்ஸை ,"நப்ஸேமுத்ம இன்னா" என்று கூறுவர். "நப்ஸே முத்மயின்னா" என்பது "லிஹா அல்லாஹ்" எனும் அல்லாஹ்வின் தரிசனத்தை பெறக்கூடிய பண்பாகும்.இது நாசூத்துடைய உலகையும், ஜபரூத்துடைய உலகையும் பொதிந்து உள்ளது.....................................
..4..கலிமாவின் நான்காவது சொல்லாகிய " அல்லாஹ் " "லாஹூத்"துடைய உலகத்தை குறிக்கும். இந்த நப்ஸே முல்ஹிமாவானது.பேரின்ப லயிப்பில் திளைக்கக்கூடியது... எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் இந்த நப்ஸ், "இல்ஹாம்" எனும் இறை உதிப்புகளின் தானமாகவும் உள்ளது. .. ஜபரூத்துடைய உலகில், ரூஹூ போன்ற இது, நாசூத், ஜபரூத்,மலக்கூத் ஆகிய உலகங்களை அடைய வளைந்து நிற்கின்றது. இந்த தானத்தை ......
" ஹக்கீகத்தே முஹம்மதி என்றும் நூரே முஹம்மதி" என்றும் சொல்வார்கள்............................
..5..கலிமாவின் ஐந்தாவது சொல்லான "ஹூ" ஏகத்துவமாகிய தாத்தை குறிக்கின்றது.இங்கே நப்ஸ் முழுவதுமாக அழிந்து "ஃபனா"வாகி தெய்வீக காதலில் சொக்கி விடுவதால் "தெய்வீகம்" மட்டும் எஞ்சியிருக்கின்றது.
" தன்னை அறிந்து வணங்குவதற்காகவே மனிதனை படைத்தேன்" என்றும்..... " நான் அறியத்தக்க புதையலாயிருந்தேன்.என்னை அறியப்பட நாடினேன். மனிதனை படைத்தேன்" என்றும் கூறுகிற "ஹதீஸ் குத்ஸீயில் உள்ள உண்மைகளை சீர்தூக்கி பாருங்கள்.
....... ................அறிஞர்களே,சட்ட நுணுக்கங்களை மட்டும் ஆராய்வதில் கவனம் செலுத்தி, காலங்கழித்து, கண்ணிருந்தும் குருடர்களிகிப்போய் விடாதீர்கள். அல்லாஹ்வைப்பற்றிய ஞானமாகிய "மஹ்ரிபத்துல்லாஹ்"வை அன்றி, மறுமையில் உங்களுடன் எந்த அறிவும் துணைக்கு வரப்போவதில்லை.
.............அல்லாஹூடைய தாத்தாகிய தத் சொரூபம் லாஹூத்து, ஜபரூத்து, மலக்கூத்து ஆகிய கண்ணாடி கூடுகளின் வழியே நுழைந்து, நாசூத்தாகிய மனித ஜடத்தினுள் பிரதிபலிப்பதை "இலாஹி" என்பார்கள். ஆனால் இந்த நாசூத்தான தேகம் அசுத்ததின் காரணமாக தாத்தின் பிரதிபலிப்பை தடுத்து விடுகின்றது.
.. இறைவனை பற்றின ஞானத்தை தேடியடைந்து, அசுத்தமென்னும் உலக மாயைகளை களைந்து தெய்வீக தரிசனத்தை கண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளே......அவர்களின் மனமென்னும் பாத்திரத்தில் " ***ஹூப்புல்லாஹ்*** என்னும் தெய்வீக காதல் சுரந்து விடுகிறது.
............................அவர்களுக்கே சுப சோபனம்..............
........................................................ஆதாரம்...................................நாஹூர் பேரரசர் அஜ்மீரில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.....